உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466

இளங்குமரனார் தமிழ் வளம் 17

நிணமிசை யிழுக்காது தமர்பிண மிடறி நிலங்கெடக் கிடந்த கருந்தலை நடுவண் மாக்கட னெருப்புப் போல நோக்குபு வெஞ்சிலை விடலை வீழ்ந்தனன்

அஞ்சுதக் கன்றாற் செஞ்சோற்று நிலையே.

கைதூ வாத கள்விலை யாட்டி

55. பகைவர் கொண்ட படுமணி யாய மீட்டிவட் டந்த வாட்டிறற் குரிசின் முழவுத்துயின் மறந்த மூதூ ராங்கண் விழவுத் தலைக்கொண்ட விளையாட் டாயத் தூன்சுடு கொழும்புகைக் கருங்கொடி யும்பர் மீன்சுடு புகையின் விசும்புவாய்த் தன்றே கைவல் கம்மியர் பலகூட் டாரமொடு நெய்பிழி நறுவிரை நிலம்பரந் தன்றே காவிற் காவிற் கணங்கொள் வண்டெனப் பூவிலை மகளிர் புலம்படர்ந் தனரே சந்தியுஞ் சதுக்கமும் பந்தர் போகிய வாடுறு நறவின் சாடி தோறும் கொள்வினை மாற்றாக் கொடையொடு கள்விலை யாட்டியுங் கைதூ வாளே.

-தொல். பொருள். 58. நச். மேற்.

17. (111) பகைவயிற் சேறல்

.

விண்மதி சூழ்ந்த வெண்மீன் இனங்கள்

56. மேற்செல்லுங் காலைத் துணைவந்த வேந்தர்தம்

57.

6

பாற்செல்லச் செல்லும் பரிசினா - னாற்கடல்சூழ் மண்மகிழுங் காட்சியான் மீன்பூத்த வானத்து வெண்மதிபோல் மேம்பட்டான் வேந்து.

ஏனாதிப் பட்டத் தானாதி சீர்மை

போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக் கார்க்கடல் பெற்ற கரையன்றோ - போர்க்கெல்லாம்