உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58.

59.

60.

புறத்திரட்டு

தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சே ரேனாதிப் பட்டத் திவன்.

இன்னும் பகைவர் எங்கே உள்ளனர்? நீணில வேந்தர் நாட்செல் விருப்பத்துத் தோள்சுமந் திருத்த லாற்றா ராள்வினைக் கொண்டி மாக்க ளுண்டியின் முனிந்து முனைப்புல மருங்கி னினைப்பருஞ் செய்வினை வென்றியது முடித்தனர் மாதோ

யாங்குள கொல்லினி யூங்குப்பெறுஞ் செருவே.

467

-தொல். பொருள். 63. நச். மேற்.

18. (117) வஞ்சினம்

இருகையேன் எறிவெனோ ஒருகை யானை?

தானால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால் யானை யெறிதல் இளிவரவால் - யானை யொருகை யுடைய தெறிவாலோ யானு

மிருகை சுமந்துவாழ் வேன்.

-தொல்.பொருள். 60. நச். மேற்.

19. (119) எயில் கோடல்

ஏணி இன்றியும் எயிலில் ஏறல்

சேணுயர் ஞாயிற் றிணிதோளா னேற்றவு மேணி தவிரப்பாய்ந் தேறவும் - பாணியாப் புள்ளிற் பறந்து புகல்வேட்டார் போர்த்தொழிலோர் கொள்ளற் கரிய குறும்பு.

கருமலை சூழும் கடலன படைகள்

61. கடல்பரந்து மேருச்சூழ் காலம்போற் சென்றோர் கொடிமதில் காத்தோரைக் கொல்லக் - கடலெதிர் தோன்றாப் புவிபோ லரண்மறவர் தொக்கடைந்தார் மான்றேரான் மூதூர் வரைப்பு.