உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470

69.

70.

71.

72.

73.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

20. (120) எயில் காத்தல்

வளநகர் செல்ல வாயில் இல்லை

இடையெழுவிற் போர்விலங்கும் யானையோர் போலும் மடையமை யேணி மயக்கிற் - படையமைந்த ஞாயில் பிணம்பிறக்கித் தூர்த்தார் நகரோர்க்கு வாயில் எவனாங்கொல் மற்று.

கார்சூழ் குன்றாம் கடிமதிற் காட்சி

ஊர்சூழ் புரிசை யுடன்சூழ் படைமாயக் கார்சூழ்குன் றன்ன கடைகடந்து - போர்மறவர் மேகமே போலெயில் சூழ்ந்தார் விலங்கல்போன் றாகஞ்சேர் தோள்கொட்டி யார்த்து.

கூற்றே அரணிற் கூடிய தன்மை

இருகன்றி னொன்றிழந்த வீற்றாப் போற் சீறி

யொருதன் பதிச்சுற் றொழியப் - புரிசையின்

வேற்றரணங் காத்தான் விறல்வெய்யோன் வெஞ்சினத்துக்

கூற்றரணம் புக்கதுபோற் கொன்று.

வேத்தமர் செய்யும் விரகுதான் என்னாம்

பொலஞ்செய் கருவிப் பொறையுமிப் பண்ணாய் நிலத்திடர் பட்டதின் றாயிற் - கலங்கமர்மேல் வேத்தமர் செய்யும் விரகென்னாம் வேன்மறவர் நீத்துநீர்ப் பாய்புலிபோல் நின்று.

பதுக்கையும் வேண்டாப் பற்றின் சீர்மை தாந்தங் கடைதொறுஞ் சாய்ப்பவு மேல்விழுந்த வேந்தன் படைப்பிணத்து வீழ்தலா – னாங்கு மதுக்கமழுந் தார்மன்னற் குள்ளூர் மறுகிற் பதுக்கையும் வேண்டாதாம் பற்று.