உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74.

75.

76.

77.

78.

புறத்திரட்டு

அவுணர் போல அந்தரந் தோன்றினார்

கொற்றவ

புற்றுறை பாம்பின் விடநோக்கம் போனோக்கிக் கொற்றுறை வாய்த்த கொலை வேலோர் - னாரெயின்மேற் றோன்றினா ரந்தரத்துக் கூடாத போரெயின் மேல் வாழவுணர் போன்று. விருந்தாய் வந்தவர் விண்விருந் தானார் வென்றி பெறவந்த வேந்தை யிகன்மதில்வாய்க் கொன்று குடுமி கொளக்கண்டு - தன்பால் விருந்தினர் வந்தார்க்கு விண்விருந்து செய்தான் பெருந்தகையென் றார்த்தார் பிறர்.

வையமுங் கொடுத்தாள் வானுங் கொடுத்தாள்

வருபெரு வேந்தர்க்கு வான்கொடுத்து மற்றை யொருபெரு வேந்தற்கூ ரீந்தா - ளொருவன்வா ளிவ்வுலகிற் பெற்ற விகற்கலையேற் றூர்தியா எவ்வுலகிற் போய்ப்பெறுங்கொ லாங்கு.

வலைவன் வலைபோல் வளைத்துக் கோடல் தலைவன் மதில்சூழ்ந்த தார்வேந்தர்க் கொன்று வலைவன் வலைசுருக்கி யாங்கு - நிலையிருந்த தண்டத் தலைவர் தலைக்கூட வீற்றிருந்தா னுண்டற்ற 1 சோற்றா ரொழிந்து.

ஆரெயில் வேட்ட அரசர் மறத்துறை

அறத்துறைபோ லாரெயில்வேட்ட வரசர் மறத்துறையு மின்னாது மன்னோ - நிறைச்சுடர்க ளொன்றி வரப்பகல்வா யொக்க வொளிதேய்ந்தாங் கின்றிவர் வீழ்ந்தார் எதிர்ந்து.

1. செற்றார்.

471

-தொல். பொருள். 68. நச். மேற்.