உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472

79.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

வேண்டார் வணக்கி விறன்மதில் கோடல் பூத்தாட் புறவிற் புனைமதில் கைவிடார் காத்தவிக் காவலர் ஏனையார் - பார்த்துறார் வேண்டார் வணக்கி விறன்மதில் தான்கோடல் வேண்டுமாம் வேண்டார் மகன்.

21. (121) அமர்

உள்ளும் புறம்பும் உடலம் வீழ்ந்தது

80. பருதிவேன் மன்னர் பலர்காணப் பற்றார் குருதிவாள் கூறிரண்டு செய்ய - வொருதுணி கண்ணிமையா முன்னங் கடிமதிலுள் வீழ்ந்ததே மண்ணதே மண்ணதே யென்று.

81.

82.

-யாப்.வி. 94.

-தொல்.பொருள். 71. நச். மேற்.

ஒருவன் போதும் ஒட்டார் தமக்கு

'கங்கை சிறுவனும் காய்கதிரோன் செம்மலும் இங்கிருவர் வேண்டா வெனவெண்ணிக் - கங்கை சிறுவன் படைக்காவல் பூண்டான் செயிர்த்தார் மறுவந்தார் தத்த மனம்.

எருமை அன்ன இகல்மாண் வீரன்

சீற்றங் கனற்றச் சிறக்கணித்துச் செல்லுங்கால்

ஏற்றெருமை போன்றான் இகல்வெய்யோன் - மாற்றான் படைவரவு காத்துத்தன் பல்படையைப் பின்காத் திடைவருங்கால் பின்வருவார் யார்.

-தொல்.பொருள். 72. நச். மேற்.

1. இது பெருந்தேவனார் பாட்டு; குருக்கள் தமக்குப் படைத் தலைவரை வகுத்தது என்பார்

நச்.