உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83.

புறத்திரட்டு

வீமன் மாமனைப் புல்லிப் பொருதது

கொல்லேறு 'பாய்ந்தழிந்த கோடுபோற் றண்டிறுத்து மல்லேறு தோள்வீமன் மாமனைப் புல்லிக்கொண் டாறாத போர்மலைந் தாங்கரசர் கண்டார்த்தா ரேறாட லாய ரென.

காட்டுத் தீயென் கதழ்ந்து செல்லல்

84.

அறத்திற் பிறழ அரசெறியுந் தானை

மறத்திற் புறங்கண்டு மாறான் - குறைத்தடுக்கிச்

செல்லுங்காற் காட்டுத்தீச் சென்றாங்குத் தோன்றுமே பல்படையார் பட்ட படி.

473

-பாரதம்

-தொல்.பொருள். 72. நச். மேற்.

உறையைக் கழிக்கவும் ஓடிய வெள்ளம்

85.

ஆளுங் கரியும் பரியும் சொரிகுருதி

86.

தோளுந் தலையும் சுழித்தெறிந்து - நீள்குடையும்

வள்வார் முரசு மறிதிரைமேற் கொண்டொழுக

வெள்வாள் உறைகழித்தான் வேந்து.

-தண்டி. 54. மேற்.

கண்கள் சிவந்தன களமும் சிவந்தது

சேந்தன வேந்தன் திருநெடுங்கண் டெவ்வேந்தர் ஏந்து தடந்தோள் இழிகுருதி – பாய்ந்த திசையனைத்தும் வீரச் சிலைபொழிந்த வம்பும் மிசையனைத்தும் புட்குலமும் வீழ்ந்து.

-தண்டி. 39. மேற்.

87.

1. பாய்ந்திறுத்த.

செம்மையர் சொல்லெனச் செல்லும் பகழி

செம்மை யுடையார் சிறியாமேற் சொல்லுஞ்சொல் வெம்மை யுடைய விறற்பகழி - தம்வன்மை