உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480

இளங்குமரனார் தமிழ் வளம் 17

25 (125) மூதில் மறம்

கூற்றினும் தாயே கொடுமை மிக்காள்

106. ஏற்றெறிந்தார் தார்தாங்கி வெல்வருகென் றேவினாள் கூற்றினுந் தாயே கொடியளே - போர்க்களிறு காணா விளமையாற் கண்டிவனோ நின்றிலனேன் மாணாருள் யார்பிழைப்பார் மற்று.

107.

சிறுவன் வீழச் சிந்தை மகிழ்ந்தாள்

ஆடும் பொழுதி னறுகயிற்றுப் பாவைபோல்

வீடுஞ் சிறுவன்றாய் மெய்ம்மகிழ்ந்தாள் - வீடுவோன் வாள்வாயின் வீழ்ந்த மறவர்தந் தாயரே

கேளா வழுதார் கிடந்து.

-தொல்.பொருள். 60. நச். மேற்.

26. (126) களம்

பேயே காக்கும் பெருந்தனி நிலைமை

108. புண்ணனந்த ருற்றானைப் போற்றுந ரின்மையிற் கண்ணனந்த ரில்லாப்பேய் காத்தனவே - யுண்ணு முளையோரி யுட்க வுணர்வொடுசா யாத

விளையோன் கிடந்த விடத்து.

-தொல். பொருள். 79. நச். மேற்.

தீராப் பசியைத் தீர்க்க வம்மின்

109. ஆளி மதுகை யடல்வெய்யோன் வாள்பாடிக் கூளிகள் வம்மினோ கூத்தாடக் - காளிக்குத் தீராத வெம்பசி தீர்த்துநாஞ் செங்குருதி நீராட்டி யுண்ட நிணம்.

-தொல்.பொருள். 91. நச். மேற்.