உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482

114.

115.

இளங்குமரனார் தமிழ் வளம் 17 வாரா தாயினும் யாதாங் கொல்லோ மெலிந்து மெலியுமென் யாக்கையிற் கழிந்த கழியுமென் னாருயிர் நிலையே.

-தொல். பொருள். 79. நச். மேற்.

28. (128) வென்றி

போந்தை புனையப் புவியெலாம் நடுங்கும்

ஏழக மேற்கொண் டிளையோ னிகல்வென்றான் வேழ மிவனேற வேந்துளவோ - வேழுலகுந் தாந்தயங்கு நாகந் தலைதயங்க வாடாமோ போந்தையங் கண்ணி புனைந்து.

எள்ளி இகழும் எண்ணம் வேண்டா

குறும்பூழ்ப்போர் கையெறிந்து கொற்றம் பெறுத லிறும்பூதென் றியாமாடல் வேண்டா - செறுங்கோன் குலமதிக்கு மாறறியிற் கொற்றவன் வேம்பு தலைமலையற் பாலதூஉ மன்று.

பறைவா ரணமும் சிறைவா ரணமும்

116. ஆர்வேய்ந்த கோலத்தோ டாடுவர் பாடுவர் போர்வேந்தர் பெற்றநாள் போன்றுவப்பர் - சீர்சால் பறைகெழு வாரணப்போர் பண்டிகழ்ந்தோ ரின்று சிறைகெழு வாரணப்போர் செய்து

-தொல். பொருள். 60. நச். மேற்.

குன்று துகள்செயுங் கூரிய கணையன்

117. குன்று துகளாக்கும் கூர்ங்கணையான் வேலெறிந் தன்று திருநெடுமா லாடினான் - என்றும் பனிச்சென்று மூளாத பல்கதிரோன் சேயோ

டினிச்சென் றமர்பொரா யென்று.

-தொல்.பொருள். 76. நச். மேற்.