உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484

121.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கோழியான் அல்லன் ஆழியான் இவனே இந்திர னென்னி னிரண்டேக ணேறூர்ந்த வந்தரத்தா னென்னிற் பிறையில்லை - யந்தரத்துக் கோழியா னென்னின் முகனொன்றே கோதையை யாழியா னென்றுணரற் பாற்று.

-தொல்.பொருள். 60. நச். மேற்.

கற்கால் கொண்டே இற்கண் புக்கனர்

122. வாட்புகா வூட்டி வடிமணி நின்றியம்பக் கோட்புலி யன்ன குரிசில்கல் - ஆட்கடிந்து விற்கொண்ட வென்றி வியன்மறவ ரெல்லாரும் இற்கொண்டு புக்கா ரியைந்து.

-தொல்.பொருள். 63. இளம். மேற்.

கதிரை நோக்கிக் கனிந்த வாழ்த்து

123. 'மேகத்தான் வெற்பான் இமையான் விழுப்பனியான் நாகத்தான் நீமறைய நாட்கதிரே - யோகத்தாற் காணாதார் நின்னை நிலையாமை கட்டுரைப்பர் 2காணாத கண்ணெனக்கு நல்கு.

பிறையை நோக்கிப் பெருகிய வாழ்த்து

124. 'பிறைகாணுங் காலைத்தன் பேருருவ மெல்லாங் குறைகாணா தியாங்கண்டு கொண்டு - மறைகாணா தேய்ந்து வளர்ந்து பிறந்திறந்து செல்லுமென் றாய்ந்தது நன்மாயை யாம்.

4

சார்பிலாச் சார்பைச் சாற்றிய வாழ்த்து

125. சார்பினாற் றோன்றாது தானருவா யெப்பொருட்கும் சார்பெனநின் றெஞ்ஞான்று மின்பந் தகைத்தரோ

1. கொடிநிலை வாழ்த்து' என்பார் நச்.

2. நாணாத.

3. இதனை வள்ளிவாழ்த்து எனக் கூறுவார் நச்.

4. இதனைக் கந்தழி வாழ்த்து எனக் கூறுவர் நச்.