உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வாய்மொழியான் மெய்யான் மனத்தான் அறிவிறந்த தூய்மையதா மைதீர் சுடர்.

485

-தொல்.பொருள். 88. நச். மேற்.

மறப்புகழ் சேர்ந்த மலையே வாழி

126. தாழி கவிப்பத் தவஞ்செய்வார் மண்ணாக வாழிய நோற்றனை மால்வரை - ஆழிசூழ் 'மண்டில மாற்றா மறப்புகழோன் சீர்பொறிப்பக் கண்டனெ னின்மாட்டோர் கல்.

இன்னிசை பாடி எடுப்போம் கல்லே

127. கல்லாயு மெற்றெரிந்து காண்டற் கெளிவந்த 3வல்லாண் விடலைக்கு வம்மினோ - வெல்புகழாற் சீரியல் பாடல் சிதையாமல் யாம்பாடத் தூரிய மெல்லாந் தொட.

வரையறை இலாற்கு, வரையறை காண்போம்

128. வரையறை சூழ்கிடக்கை மாத்தாட் பெருங்கல் வரையறை செய்யிய வம்மோ - வரையறை வாராப் பெரும்புகழ் வல்வேல் விடலைக்கும் ஓராற்றாற் செய்வ துடைத்து.

129.

130.

காப்புநூல் யாத்துப் பூப்பலி பெய்க காப்புநூல் யாத்துக் கடிகமழ் நீராட்டிப் பூப்பலி பெய்து புகைகொளீஇ - மீப்படர்ந்த காளை நடுகற் சிறப்பயர்ந்து கால்கொண்மின் நாளை வரக்கடவ நாள்.

கண்ணீரி னின்று கன்னீர்ப் படுத்தார் வாளமர் வீழ்ந்த மறவோன்கல் ஈர்த்தொழுக்கிக் கேளிர் அடையக் கிளர்ந்தெழுந்து - நீள்விசும்பிற் கார்ப்படுத்த வல்லேறு போலக் கழலோன்கல் நீர்ப்படுத்தார் கண்ணீரி னின்று.

1. மண்டல.

2. மேறெதிர்ந்து.

3. வல்லான் படலைக்கு.