உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494

இளங்குமரனார் தமிழ் வளம் 17

போர்பு - அரி அடித்து மணியாக்கியது. அஃதாவது நெற்போர்.

-

(1242) சில்லி - சிள்வண்டு. நெடுவிளி - பேரொலி. ஆனா – குறை வில்லாத. மரம்பயில் - மரங்கள் செறிந்த. பரற் புறங்கண்ட பருக்கைக் கற்கள் மேலே எழும்பிக் கிடக்கும். வடியா நெடு நெறி - செப்பம் செய்யப் பெறாத தொலை வழி. செல்லா - சென்று. புடையது - பக்கமாக அமைந்த. வகுந்து - வழி. “வகுந்து செல் வருத்தத்து' - சிலப். 11:167. காமுற - விரும்ப. பானாறு செவ்வாய் - பால் மணக்கும் சிவந்த வாய். புன்றலை - மெல்லிய இளந்தலை மக்கள். கடிமனை விருப்பமிக்க மனை. நிரை திரண்ட. "செல்லா, போகி, பருகி,

மகாஅர்

-

கை

பசுக்கூட்டம். கவைஇய

-

கவையிய நிரை கன்று சூழ் கடிமனை சென்றன” என்க.

-

-

(1332) மாமுது தாதை மிக முதிர்ந்த தந்தை (தயரதன்). மா ரலை - பொன்மான் (மாரீசன்). வேட்டம் - வேட்டை. தலைமகள் - சீதை. சேணிடை - நெடுந்தொலைவிடம். முற்றியது - முற்றுகை

யிட்டது.

-

66

இறைவன் - சிவன், “நீலமணிமிடற்று ஒருவன்" - புறம். 91. உலகு பொதி உருவம் - உலகினை உள்ளடக்கும் உருவம் “உலகு பொதி உருவத்துயர்ந்தோன் - சிலப். 26:55. தொகைஇ - சேர்த்து. தலைநாள் - முன்னாள். வெண்கோட்டுக் குன்றம் பனிக்குவடு களையுடைய இமயம். மீளி - வல்லாளன் (இராவணன்). ஊர் - இலங்கை. மீளியாகிய வண்தோள் ஆண்டகை. மாதர் - அழகு. கெண்டையின் வரிப்புறத் தோற்றமும், குவளை நிறனும் பாழ்பட அகழி விளிம்பழிந்து நீருகுத்தது. அரக்கியர் கண் பாழ்பட விளிம் பழிந்து நீருகுத்தது. விளிம்பழிந்து நீருகுத்தல் அகழிக்கும் கண்ணுக்கும் பொதுவாயிற்று. அலங்குதடறு ஒளிமிக்க உறை. ஞான்று பொழுது.

-

-

சல

(1334) இருசுடர் -ஞாயிறும் திங்களும். வழங்கா வோட்டாத. கடந்த ஞான்று வஞ்சித்தல் இன்றி எதிரே நின்ற பொழுது. கடத்தல் - வஞ்சியாது எதிர்நிற்றல்; - புறம் 8:5. உரை. எண்கு - கரடி. மிடைந்த - செறிந்த. சேனை - குரங்குப்படை. பச்சை போர்த்த தண்ணடை - பசும்போர்வை போர்த்தாற் போன்ற வளமிக்க வயல் நிலம். எச்சார் மருங்கினும் - எல்லாப் பக்கங்