உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514

போலாதே

இளங்குமரனார் தமிழ் வளம் 17

-

-

வீணாக

போன்றதே அன்றோ. கொன்னே ஒளிப்பார் - ஈயாது மறைப்பவர். அளிப்பார் - ஈவார். தமனியமும் இரும்பும் பொன்னாதல் போன்றதே ஒளிப்பாரும் அளிப்பாரும் மக்கள் என்பது.

(542) இருபால் பற்றி - இரண்டு பாகுபாடுபற்றி. விளையும் - உண்டாகும். என வேண்டா - என்று கூற வேண்டா. தாதை - தந்தை. ஒன்றாது -பொருந்தாது. நீத்தான் - விலக்கியவன் தன் தந்தை காமம் நுகர்தற்காகத் தன் காமம் நீத்தவன் வீடுமன். இவன் தந்தை சந்தனு மணம் புரியும் எண்ணத்தை ஈடேற்றுவதற்காகத் தான் மணம் புரியாமை மேற் கொண்டான் (பாரதம்)

-

(1159) யானைநிரை - யானைக் கூட்டம். தேரோர் - அரசர். னை நிரை ஆனிரை (பசுக் கூட்டம்). ஏர்வாழ்நர் உழவர். வென்றி பயக்கும் - வெற்றி தேடித் தரும். பகடு - காளை. அரசரோ ஏருடை யார்க்கு ஒப்பு? வேளாண்மை புரிவார்க்கு ஆட்சி புரிவார் ஒப்பாகார் என்பதாம்.

(1160) நிலம் பொறை ஆற்றா நிதி - நிலம் சுமக்க மாட்டாத செல்வம். கொண்டும் - பிறரிடம் கொடையாகப் பெற்றுக் கொண்டும் தீங்கு - குற்றம். அஃதாவது இரந்து பெற்றார் என்னும் இழிவு. நலம் கிளர் - நலம் விளங்கும். தாவாது - குறைவின்றி “தீயில் அவி சொரியச் சொரிய ஒளிபெறுமாறு போல், பிறர் பொருள் பெறப் பெறக் குறைவிலாது அந்தணர்க்கு ஒளியுண்டாம்” என்றவாறு. (1161) ஈட்டிய வெல்லாம் தேடியவை அனைத்தும். காட்டிய - காட்டு காட்டுமாறு. வேட்டொறும் விரும்புந்தோறும். காமருதார்ச் சென்னி - அழகிய ஆத்திமாலை அணிந்த சோழன். புகார் - பூம்புகார், காவிரிப்பூம் பட்டினம். தாமரை சங்கு என்பன பதுமநிதி, சங்கநிதி எனப்படுவன. 'சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து' என்பது அப்பர் வாக்கு (6.95.10) தாமரை போன்றும் சங்கு போன்றும் அமைந்து, அள்ளக் குறையா நிதி என்பர்.

-

(1236) வெவ்வாள் - விரும்பத்தக்க வாள்; கொடியவாளு மாம். மிலைச்சிய -அணிந்த. வெட்சி - ஒருவகைப் பூ; பகைவர் பசுக்களைக் கவரச் செல்வார் அணியும் பூ. 'செம்மலர்' சூடிச்