உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

515

செல்வது செவ்வானம் செல்வதுபோல் என்றார். எவ்வாயும் - எல்லா இடங்களிலும் ஆங்கண் - ஆங்கு படாலியரோ - படாது இருக்கட்டும். துடி - ஒரு வகைப் பறை. ஆகோட்பறை என்பதும் அது.

“செல்கின்றார் கழலொலி துடியொடு புக்குப் படாலியரோ” என்க.

(1237) வலம் - வலிமை. வயவேந்தன் - வெற்றி வேந்தன். தாள் வல் இளையவர் - முயற்சியிற் சிறந்த வீரர். கனைகுரல் - கனைப் பொலி. நல்லா - நற்பசு. கன்றுள்ள - கன்றை நினைக்க. வேந்நன் ஏவலால் இளையவர் செல்லின் பசு கன்றை நினைத்துக் கொட்டும் பாலால் இவ்வூர் நனையும் போலும். முதல் நாள் இளையர் போவதைக் கண்ட ஒருவர் துணிவுரை இது.

-

-

(1238) வந்தநிரை - வர இருக்கும் பசுக்கூட்டம். இருப்புமணி இரும்பால் செய்யப்பெற்ற மணி. எந்தலை நின்றலை யான் தருவன் எம் தலையை நின்னிடத்து யாமே கொய்து தருவேம். முந்து முதற்கண். கொற்றவை - காளி. கொற்றம் கொடு - வெற்றியைத் தா. முந்து நீ மணியுடன் தலை பெற்று வேந்தன் கோலோங்கக் கொற்றங்கொடு” இது கொற்றவை நிலை. ஆவது,

66

“ஒளியினீங்கா விறற்படையோள் அளியினீங்கா அருளுரைத்தன்று”

(1239) திரைகவுள் வெள்வாய்

-

-புறப்பொருள். 20

சுருக்கம் அமைந்த கன்னத் தையும் வெளுத்த வாயையும். திரிந்து வீழ்தாடி - திரிக்கப்பெற்நுத் தொங்கும் மீசையையும். இது நரை முதியோன் தோற்றம் உரைத்த வாறு. நற்சொல் சகுனம் (விரிச்சி) சொகினம் என்பது சகுனம் ஆயிற்று. எல்லை நீர்வையம் - நீரை எல்லையாக உடைய மண்ணுலகம். வல்லையே - விரைவாக. “முதியோன் நற்சொல் இறையோர்க்கு நிரையன்றி வையமும் அளக்கும்; வல்லை வழி சென்மின். நிரைகொள்ள எழுந்தவர்களைக் கண்டவர்கள் கூற்று.

99

(1240) பிறர்புலம் - பகைவர் இடம். தமர்புலம் - தம் இடம். என்னார் – என்று எண்ணாதவராய். விறல் வெய்யோர் - வலிய வீரர். வீங்கிருள் கண் - செறிந்த இருட்போதில். கடாஅம் மதம். படாஅம் - நெற்றிப்பட்டயம் கட்படாமுமாம். முகம் படுத்தாங்கு - முகத்தில் அணியப்பெற்றது போல கடாஅஞ் செருக்கும் யானைக்குப் படாஅம் படுத்தது போன்ற பேரிருளில் வீரர் சென்றார் என்க.