உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516

-

இளங்குமரனார் தமிழ் வளம் 17

-

(1245) அடி அதிர் ஆர்ப்பினர் - அடிகள் அதிர ஆரவாரத்தின ராய். ஆபெயர்த்தற்கு - வெட்சியார் கவர்ந்துபோன பசுக்களை மீட்டற்கு. கடிய மறவர் கதழ்ந்தார் - அஞ்சத்தக்க வீரர் சினந்தெழுந் தார். மடிநிரை - மடக்கிக்கொண்டு செல்லப்பட்ட பசுக்கூட்டத்தை. மீளாது மீளான் மீட்டி வாராது வாரான். விறல் வெய்யோன் வீரத்தால் உயர்ந்தோன். யாதாங்கொல் - என்னாகுமோ? வாளார் துடியார் வலம் வாளைத் தாங்கிய துடி கொட்டுபவர் வெற்றி. துடிப்பறை அறைந்து வெட்சி வீரருடன் சென்ற துடியர் வெற்றி வெற்றி யாகாது. பசு மீட்டப்படும் என்பதாம் இனி ‘வளம்’ எனப் பாடம் கொள்வார்க்கு “துடியார் வளம் யாதாங்கொல்? எல்லாம் மீட்டப்பெறும் ஆதலால் அவர்க்கு ஒன்றும் இல்லையாம்” என்றவாறு.

என்க.

66

அன்னாய், ஆபெயர்த்தற்கு மறவர் கதழ்ந்தார்; விறல் வெய்யோன் நிரை மீளாது மீளான்; வாளார் துடியார் வலம் (வளம்) யாதாங்கொல்”

(1216) பசுக்கன்றுகளை நோக்கிக் கூறியது. கவர்ந்தாங்கு வாரிக்கொண்டு போவது போல. கவலை - கவர்த்த வழிகள். இரைத்தெழுந்தார் - ஆரவாரித்து எழுந்தார். நும் கிளைகள் - நும் உறவான பசுக்கள். மன்றுகாண் வேட்கை மடிசுரப்ப தொழுவத்தைக் காணும் ஆவலால் மடி சுரப்புடன். மெய் குளிர்ப்பீர் - வெம்மை நீங்கி மகிழ்வீர்.

ஏனம் கோடு

66

-

கன்றுகளே, மறவர் எழுந்தார்; நும்கிளைகள் மன்று

காண் வேட்கையால் மடிசுரப்பத் தோன்றுவ; கண்டுமெய்குளிர்ப்பீர்”

(1247) “கடல்புக்கு” புக்கு - புகுந்து. மண் - நிலவுலகம். கார் கரிய பன்றி; திருமாலின் பத்துத் தோற்றரவுகளுள் ஒன்று. கொம்பு. மிடல் - வலிமை. தொடலை

-

-

-

இலையும் தழையும் அமைந்த மாலை. கருதாதார் - பகைவர். உள்ள - என்றும் மறவாது நினைக்க. துரந்து ஓடச் செய்து.

-

“கரந்தை மறவர்தோள் ஏனக்கோட்டின் மிடல்பெரிது எய்தின

என்க.