உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

-

517

(1248) கல்கெழு சீறூர் - முரம்புகள் அமைந்த சிறிய ஊர், கடை - வாயில். நடவா விரையும் நடவாமல் விரைந்தோடும். என்னோ - என்ன? தெள்அறல் கான்யாற்றுத் தீநீர் - தெள்ளிய மணலைக் கொண்ட காட்டாற்றின் இனிய நீர். மள்ளர் - வீரர். இவண், கரந்தை மறவர்.

என்க.

“நிரை சீறூர்க் கடைகாண் விருப்பினால், மள்ளர் தீநீர் பருகவும் நடவாவகை விரையும்

உயிரைப்

(1249) காட்டகம் - காடு. உயிர் போற்றான் பொருட்டாக எண்ணாதவனாக. கடுஞ்சுரையான் - பருத்த மடியை யுடைய பசுவை. வினவுறாள் - நிகழ்ந்ததெதுவும் கேளாதவளாய். ஓட்டந்து ஓடிவந்து. புனிற்று ஆத்தழீஇ - இளங்கன்றுப் பசுவைத் தழுவி. என்னது பட்டாயோ - எத்துயர் பட்டாயோ. கலுழும் அழும். “ஆன் மீட்ட மகனை வினவுறாள்; என்னது பட்டாயோ' என்று புனிற்றாத் தழீஇக் கலுழும்” என்க. தாய் தன் ஆவின்மேல் கொண்ட அன்பைப் புலப்படுத்தியவாறு.

(1250) பகர்ந்திட - கூற. தமர் - தமக்கு உரியவர். அறிந்தன கொல் - அறிந்தனவோ. ஏமம் உற்று - மகிழ்ச்சி கொண்டு. தம்மை - தம் தாய்ப் பசுவை. கன்று ஏய்ப்ப - கன்று போல. சென்றீயும் செல்லும்.

“ஈன்ற தாயை அன்றே அறிந்து கொள் கன்று போல இனநிரை தமரைத் தாமே அறிந்து அவர்பாற் சேரும் யாமே பகர்ந்திட வேண்டா

என்று முடிக்க.

(1255)நசைஇ

-

-

-

விரும்பி. எடுப்ப மிக. ஒருபாற் ப - படர்தர வேந்தன் எண்ணம் ஒரு வழிப்பட்டதாய் அமைய. ஒன்னார் பகைவர். இருபாற் படுவதெவன் இருவழிப்பட்ட தென்ன? வேந்தன் எண்ணம் ஒருபாற் பட்டதாகப் பகைவர் உள்ளம் இருபாற் படுவது எவன் என இரங்குமுகத்தான் எழுச்சி மாண்பு உரைத்ததாம். விண்ணசைஇச் செல்லும்வீரரை யுடைமையால் அவன் எண்ணம் ஒருபாற் பட்டதாயிற்று.