உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518

இளங்குமரனார் தமிழ் வளம் 17

-

(1256) பார்ப்புரவு - நிலத்தைப் பேணிக் காத்தலை. எண்ணான் கொல் - எண்ணமாட்டானோ. ஊர்ப்புறத்து நில்லாத் தானை ஆகலான் அகத்துச்சேரும் என்பதாம். நிலனெளிப்ப -நிலத்தின் முதுகு நெளியுமாறு. 'மலைமுதுகு நெளிய' என்றார். அடிகளார். சிலப். 26.82. நீளிடை -நெடுந்தொலைவிடம். புல்லார் பொருந்தார் (பகைவர்) “பார்வேந்தன் புல்லார்மேற் செல்லும் பொழுது பொடியாய் எழும்;” “பார்ப்புரவு எண்ணான் கொல்" என்க. ‘பார்புரக்க வேண்டியவன் பார் புழுதி பட்டுக் கிளம்புவதை எண்ணான் கொல்' என நயமுறக் கூறினார்.

-

-

(1271) வேனிலான் - மன்மதன். ஐங்கணை - ஐந்து மலரம்பு களும். மூதில்வாய் பழம் பெருமை வாய்ந்த இல்லத்தில். முல்லைசால் - முல்லை ஒழுக்கம் அமைந்த. முல்லை ஒழுக்கமாவது 'இல் இருத்தல்.' கூதிரின் குளிர் காலத்தில். ஆறு பருவங்களுள் கூதிர்ப்பருவம் ஒன்று. 'காரே கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில், என ஆவணி முதல் இரண்டிரண்டு மாதங்கள் எண்ணப் பெறும். இல்வாய்த் தங்கிய மகளிரிடம் பிரிவுத்துயர் உண்டாக்கிய வேனிலான், பாசறை வேந்தனிடம் உண்டாக்க முடியாமல் தோற்றான். பாசறைக்கண் இருக்கும் வேந்தன் பிரிவு நோக்கிக் கலங்கக் கூடாது என்பது விதி. அதனைக் கொண்டு கூறியது. வேனிலான் மகளிர்பாற் பெற்ற வலியளவோ, வேந்தன் பால் தோற்ற அழிவு? என வினவினார். அழிவு என்பதை அளவு’ எனப் பாடங் கொள்வாரும் உளர். (பெருந்தொகை. 544)

-

(1272) மாற்றுப் புலம் - பகைவர் இடம். தேர்மண்டி - தேர் நிறைந்து; வேற்றுப் புலவேந்தர் - பகைவர். வெல் வேந்தர் - படை எடுத்துச் சென்ற அரசர். எற்ற போர்மேற்கொண்ட. பாணொலி- பாணர் ஒலி. பல்கின்றால் மிகுதியாயிற்று. ஒன்னார் உடையன பகைவர் உடை மையான பொருள்கள்.

-

"வேற்றுப்புல வேந்தரும் வேந்தரும் போரிடுங்கால் கிளர்ந்த படை யொலியிலும், பகைவர் உடைமைகளைப் பெற்று வந்த பாணர் ஒலி மிகுதியாயிற்றாம்” என்றவாறு.

பாணர் உடன் வந்தது, பகைவரை வென்று அவர் பொருள் தருவதாக மன்னன் முன்னரே கூறிய உறுதிமொழி கொண்டாம். “ஒன்னார் ஆரெயில் அவர்காட்டாகவும், நுமதெனப் பாண்கடன் இறுக்கும் தன்மை" என்று பாராட்டும் புறம்.(203)