உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

519

(1273) தழிச்சியவாட் புண்ணோர் - தம்மேல் வரும் படை களைத் தடுத்துக் கொண்ட வாட் புண்ணுடையோர். பழிச்சிய சீர் - பாராட்டி வாழ்த்தும் சிறப்புடைய. பாசறை வ தூர்ந்தன - மேடுபட்டு ஆறின. புல்லணலார் வீரர்.

66

பாடி இருக்கை. இளந்தாடியுடைய

பாசறை வேந்தன், புண்ணோர் இல்லந்தொறும் சொல்லிய சொல்லே மருந்தாகப் புல்லணலார் புண் தூர்ந்தன என்க. தழிஞ்சி யாவது, கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக் கொண்டு புண்பட்ட வீரர்பால் அரசன் நேரிற் சென்று வினாவியும் பொருள் கொடுத்தும் தழுவிக் கோடல். தொல். பொருள்.63. நச்.

99

(1325) பால்மதி - வெண்ணிலவு. பகல் எறிப்பதென் கொலோ பகற்பொழுதில் ஒளி செய்வது ஏனோ? ‘பகற்பொழுதில் நில வெறிப்பது தீக்குறி’ எனக் கருதினர். இகல் அரணத்துள்ளவர் - வலிய கோட்டையுள் இருந்தவர் அகலிய விண் தஞ்சம் என்ன விரிந்த குடை - அகன்ற வானமும் சுருங்கியதே என்னுமாறு விரிந்த குடை. குடை நாட்கோள் - அரசன் தான் போர் குறித்துச் செல்லுவதற்கு முன், நற்பொழுதில் குடையை முன்னே செல்ல விடுவது குடை நாட்கோள் ஆகும். “செற்றடையார் மதில் கருதிக்கொற்ற வேந்தன் குடைநாட் கொண்டன்று” என்பது வெண்பா மாலை. 96. சும்பிளித் தார் - கூசினார். ஒளிமிகுதி கண்டு கண் கூசுவதைச் சும்பிளித்தல் என்பர். “சுமந்த நாகமும் கண் சும்புளித்தவே” என்பது கம்பர் வாக்கு. ‘அரணத்தோர் அஞ்சிச் சும்பிளித்தார் கண்' என்க.

(1326) முதற்கண் தொழுது விழாத குற்றத்திற்குக் கழுவா யாகக் கடவுளைப் பேணி அழுது விழாக் கொண்டனர் மகளிர். அன்னோ - அந்தே: இரக்கக் குறிப்பு. முழுதளிப்போன் - நிலமுழுதும் காக்கும் வேந்தன்; அவன் முற்றிய வேந்தன்; வாள்நாட்கோள் நற்பொழுதில் வாளை முன்னே செல்ல விடுவது. மகிழ்நர் - கணவர். நீள்நாட் கோள் என்று - நீண்ட வாழ்நாள் கொள்க என்று வேண்டி.

66

'மடந்தையர் வாணாட்கோள் கேட்டு, மகிழ்நர்

நீள் நாட்கொள நினைத்துத் தொழுது விழாக் குறைக்குக் கடவுட்பேணி அழுது விழாக் கொள்வர்”

என்று இயைக்க.