உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520

வெம்பசி

-

இளங்குமரனார் தமிழ் வளம் 17

(1327) எயிலகம் - மதிலுள். புக்கன்றி - புகுந்து அல்லாமல். பொற்றேரான் முற்றுகையிட்ட வேந்தன். போனகம் - உணவு. கொடிய பசி. பசித்தீ: உருவகம். மறலி - கூற்றுவன். எற்றாங்கொல் - என்னாமோ? எயிலகம் புக்கன்றிப் பொற்றேரான் போனகம் கொள்ளான். மறலி வயிறு எற்றாங்கொல்?

-

ஒப்பு: “நாளைச் செய்குவென் அமரெனக் கூறிப்

புன்வயி றருத்தலும் செல்லான்'

66

காலை முரச மதிலியம்பக் கண்கனன்று

வேலை விறல் வெய்யோன் நோக்குதலும் - மாலை அடுகம் அடிசிலென் றம்மதிலுள் இட்டார்

தொடுகழலார் மூழை துடுப்பு”

(மூழை - அகப்பை).

-புறம். 304.

புறப்பொருள் வெண்பாமாலை 117.

  • 1328) அன்னதோர் பெற்றித்தே - அத்தகையதோர் தன்மையதே. வாய் வாங்கு வெல்படை - வாய்மை அமைந்த வெற்றிமிக்க படை. விரும்பாதார் - பகைவர். முற்றி - முற்றுகை இட்டு. கொல்படை - இரக்கமின்றிக் கொல்லும் படை வீரர். வீட்டும் - அழிக்கும். விரும்பி அடிபணிந்திருந்தால் வேந்தன் ஏற்றுக் கொண்டிருப்பான். அவ்வாறு

-

செய்யாமையால் அவன் வீரர்களின் கைப்பட்டு அழிந்தனர். இத்தன்மை தாய் வாங்குகின்ற மகனைத் தனக்கென்று பேய் வாங்கிக் காண்ட தொப்பதாம் என்றவாறு. பேய் வாங்கிக் கொள்ளுதல்,

கொலைப்பொருட்டு.

“இடு பிணந்தின்னும் இடாகினிப் பேய்வாங்கி மடியகத் திட்டாள் மகவை'

99

-என்பதையும் (சிலப். 9:21)

பேய் கோட்பட்டான்' என்பதையும் (நன். 256) நோக்குக.

(1329) எயில்கோள் - மதிலைக் கொள்ளுதல். மஞ்சு - மேகம். புரிசை - கோட்டை. பொறியும் - எந்திரங்களும். அவை, வளைவிற் - பொறி, கருவிரலூகம், கல்லுமிழ் கவண் முதலியவாகக் கூறப்பெறுவன. (சிலப். 15: 207 - 216). ஐம்பொறிகளும் அடங்கிய ஆன்றோர் போல் 15:207-216). கோட்டையின் அனைத்துப் பொறிகளும் அடங்கின என்பதாம். அவற்றின் ஒடுக்கத்தால் வேந்தன் வீரமாண்பு வெளிப்படுத்தவாறு.