உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

521

(1330) பொருவருமூதூர் - இணைகாட்டுதற்கரிய தொன்மை யான ஊர். போர்வேட்டு - போர் செய்தலை விரும்பி. உடன்று - எதிரிட்டு. ஏணி - மதிலிற் சார்த்தி உட்புகுதற்குப் பயன்படுத்தப் படுவது. இப்போர் 'ஏணி நிலை' எனப்படும். ஏணிநிலை.

“தொடுகழல் மறவர் துன்னித் துன்னார்

இடுசூட் டிஞ்சியின் ஏணி சாத்தின்று'

- (பு.வெ.மா. 112.)

எனக் கூறப்பெறும். மண்ணில் சார்த்தி, மதிலில் சார்த்திய ஏணி, விண்ணில் சார்த்தவும் ஆகிவிடும் என்றது இருசார் வீரரும் பட்டு மடிவர் என்றதாம்.

(1337) குன்றுயர் திங்கள் போல் குன்றத்தின்மேல் உயர்ந்து தோன்றும் திங்களைப் போல். நிவப்ப மேலெழுந்து தோன்ற. ஒன்றார் - கூடார், பகைவர். துளங்கின - நடுங்கின. தோற்றம் தொலைந்து -பெருமிதம் இழந்து. வேந்தன் குடை திங்கட்கும், பகை வேந்தர்களின் குடைகள் விண் மீன்கட்கும் உவமையாயின. குடைகளின் துளக்கம். விண்மீன்களின் துளக்கத்துடன் எண்ணி நயங்காண்க.

(1338) முற்றரணம் - முற்றப்பட்ட மதில். அரணத்தை முகில் என்றார்; அம் முகிலில் தோன்றும் ‘உருமு' (இடி) வாள் நாட்கோள் என்றார். புற்றிழந்த நாகம் - புற்று இடியுண்டு இழந்துபோக வாழிட மற்ற பாம்பு. வேகம் - விரைவு. குழாக்களிறு - களிற்றுக் கூட்டம். வேந்து - வேந்தர்கள். நாகம் பலவாயினமைக்கு ஏற்ப வேந்தரும் பல ராயினர். “கொற்றவன் வாள் நாட்கோளால், பகை வேந்தர் புற்றிழந்த நாகம் போலாயினர்" என்பதாம்.

(1339) பொருசின மாறாப் புலிப்போத்து - போர் செய்து வந்து அக்கோபம் ஆறாத ஆண்புலி. அருவரை - க கடத்தற்கரிய மலை. புலிப் போத் துறையும் வரைகண்டார் போல் அஞ்சி ஒருவரும் உள்ளே புகாமையால் மதிலுள் இருந்த வேந்தன் வேண்டுவோர்க்கு வேண்டுவன தந்து வீற்றிருந்தான் என்றவாறு. அவன் பெயர் கேட்ட அளவிலே பகைவர் அடங்கியவாறு கூறியது.

(1340) மழு

-

பரசு. அது கோடரி. மிளை காவற்காடு.

-

மதிலான் அகழ் தூர்ந்து

-

மதில் இடிபடுதலால் அகழ் மேடாகி.

ஏற்றுண்டது - தாக்கப்பட்டது. மட்டுஅவிழ் கண்ணி - தேன்