உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522

இளங்குமரனார் தமிழ் வளம் 17

ஒழுகும் மாலை. வேந்தன் சீற்றத்தீயால் பெரும்பாலும் அழிந்தன. அழிபடா திருந்த மிளையை வீரர் மழுவும், அகழை மதிலிடிபாடும் கெடுத்தன என்பதாம்.

(1341) பேரும் - பின்வாங்கும். தகர் - செம்மறி யாட்டுக்கடா. ஒதுங்கியும் - பின் வாங்கியும். 'ஒடுங்கியும்' என்பது பாடமென் பாரும் உளர். கார்க்கீண்டு - மேகத்தை ஊடுருவி. இடிபுறப் பட்டாங்கு இடி எழுந்தாற் போல. எதிரேற்றார் தடுத்தார். மாற்றார் அடி புறத்தீடும் அரிது - பகைவர் அடி பிறக்கிட்டு ஓடி உய்வதும் அரிது. புறத்தீடு - பிறக்கீடு. “ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து” என்னும் குறள் (486) நோக்கத்தக்கது.

-

-

(1348) ஏறுண்ணும் இடியுண்ணும். அஃதாவது தாக்கப் யானை. மீட்டு படும். என்னும் படியால் - என்னுமாறு. பகடு விலக்கி. இமையாத கண் கண்டு இமையாத கண்ணால் கண்டு. இடியால்இடி முகிலும் ஏறுண்ணும் என்பதுபோல் வேலால் பகடு எறிந்து ஆர்த்தார் என்க. வேலுக்கு இடியும் பகட்டுக்கு முகிலும்

உவமை.

-

-

(1349) குரிசில் அரசன். கேள் - உறவு. உறவற்றாராகிக் கொன்றாரே உறவாகினார் என்பார் ‘கேளின்றிக் கொன்றாரே கேளாகி' என்றார். வீழ்ந்துபட்ட வீரனது தறுகண்மை பகைவர் பாராட்டும் தகையதாக இருந்தது; அவ்வீரன் பட்டுவீழ்ந்த மண்ணை அள்ளித் தம் தலையில் பூப்போல் இட்டுக்கொண்டு ஆடினார்; ஆர்த்தார். அரசன் கொள்ளும் உவகைக்கு அளவுண்டோ? இல்லை என்க. இதனைக் ‘களிற்றொடு, பட்ட வேந்தனை அட்டவேந்தன் வாளோர் ஆடும் அமலை' என்பார் தொல்காப்பியர். பொருள். புறத். 17.

-

(1359) வான்துறக்கம் - வானமாகிய துறக்கம்; தேவருலகம். வேட்டு விரும்பி. தம்குறை வீரர்களின் தலையற்ற உடற் குறைகள். மான்தேர் - குதிரை பூட்டப்பெற்ற தேர். பனிப்ப - நடுங்க. வேந்து – (பகை) வேந்தன். விட்ட உயிர் விடாப்பாய்ந்தன - போகும் உயிர் போகாநிலையில் துள்ளின. “உடற்குறை பல துள்ளல் மறவர் துறக்கம் வேட்டெழுந்தார் என்பதற்குச் சான்றுரைப்ப போன்றன"