உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524

இளங்குமரனார் தமிழ் வளம் 17

எண்ணியறியாத வீரரும். மலையும் மலையும் சினங்கொண்டு மோதுதல்போல் யானைகள் மோதி வீழ்ந்தன. அவற்றின்மேல் வீரர் தோற்றமளிப்பது மலையுறையும் தெய்வம் தோற்றமளிப்பது போன்றதாம்.

  • 1430) பிணநிணக் கூழ் - பிணத்தின் கொழுப்பாகிய கூழ் வேந்தன் தேர் பிணத்தின்மேற் செல்லுதலால் நிணக்கூழ் உண்டாயது. அதனைக் கொற்றவை போர்ப்பரிசிலாகப் பேய்கட்கு அளிக்க அவை குரவைக் கூத்தாடின என்பதாம்.

66

அடுதிறல் அணங்கார

விடுதிறலான் களம் வேட்டன்று”

என்பது புறப்பொருள் வெண்பாமாலை 160. இது களவேள்வி யாம்.

-

(1501) கண்ணுதலோன் - சிவபெருமான். கடிநேமியோன் உலகைக் காத்தற்காகச் சக்கரத்தைக்கொண்ட திருமால். எண்ணிருந் தோள் ஏந்திழையாள் எண்ணத்தக்க பெருமைவாய்ந்த தோளை யுடைய கொற்றவை. பண்ணிய நூல் - படைத்தநூல். சென்னியர்க்கு - சோழர்க்கு. மன்னுக - நிலைபெறுக. மண்மிசை - மண்ணின் மேல். "கண்ணுதலோன் நேமியோன் ஏந்திழையாள் காக்கச், செல்வ நீ நாளும் இம்மண்மிசை மன்னுக” என்க. வெண்பா முன்னாகவும், அகவல் பின்னாகவும் வந்ததாகலின் இது மருட்பாவாம்.

மேருமந்தர புராணம் பாடல் 1

(397) வானத்து இடு விலின் ஈண்ட மாயும் வானத்துத் தோன்றும் வில்லைப்போல் விரைந்து அழியும். வாரிப் புதியதன் நீர் போலும் - காட்டாற்றுப் புதிய வெள்ளப் பெருக்குப்போல வரும். வெளியிடை விளக்குப்போல வீயும் ஆயுவும் - காற்றுமிக்க வெளி யிடத்தில் வைக்கப்பெற்ற விளக்கைப்போல் வாழ்நாள் அழியும். வீட்டுக்கு - வீட்டின்பம் பெறுதற்கு. உளபகல் - வாழ்நாள். நீரார் - தன்மையுடையார்.

-

யாப்பருங்கலம்

பாடல்கள் 2

(602) வரை - மலை. கீண்டு - கல்லி, தோண்டி. வரைவயிரம் வயிரம்கொண்ட மூங்கில். தெரியில் - ஆராய்ந்தால். கரிய வரை