உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

525

-

நிலையார் - கருமலை போன்ற பெரியவர். வயிரங்கொண்டு மனக்கறுவுகொண்டு, சினங்கொண்டு. “வயிரங்கொண்ட மூங்கிலைக் கொண்டு மலையைத் தோண்டிக் காட்டுவார் எவர்? ஒருவரும் எவர்?ஒருவரும் இலர். அது போலவே மலைபோன்ற பெரியவர் வெகுண்டால் அவரைச் சிறியவர் சினங்கொண்டு என் செய்வார்? எதுவும் செய்யார்” என்பதாம். இரு குறள் நேரிசை வெண்பாவிற்கு இப்பாடல் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளது. (யாப்பருங் கலம். 60. காரிகை. 23)

-

(865) மலிதேர் - நிறைந்த தேர். கச்சி - காஞ்சி. கச்சிபடுவ - காஞ்சியில் உண்டாவன. கடல்படா கடலில் உண்டாகா. கச்சி கடல்படுவவெல்லாம் படும் கச்சியில் கடலில் உண்டாவன எல்லாம் உண்டு.

-

ஒலியாலும் பெருமையாலும் கச்சியும் கடலும் ஒக்கும். கிடைக்கும் பொருளால் ஒவ்வா.

இப்பாடல் மூன்று விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா விற்கும் (யாப்பருங்கலம். 61. யாப்பருங்கலக்காரிகை. 24) உயர்ச்சி வேற்றுமையணிக்கும் (தண்டி. 48) மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளது.

மூலம் விளங்காதன

-

பாடல்கள் 13

(838) கண்டறி வருந்துணை கண்டு அறிதற்கு அரிய அளவு. மேதி எருமை. கனையும் நெருங்கும். சுரும்பிவர் கமுகு வண்டுகள் சூழும் கமுகு.

கரும்பும் கமுகும் ஒன்றை ஒன்று விஞ்சி வளர்ந்திருத்தலால் கரும்பு இது கமுகு இதுவெனக் காண்பது அரிதாயிற்று. எருமை கடித்துத் தின்னுதற்குச் செல்லுதலால் கரும்பையும், வண்டுகள் சூழ்ந்து மொய்த்தலால் கமுகையும் கண்டறிய முடியும் என்பதாம்.

(1355) குழாக்களிறு களிற்றுக் கூட்டம். குறித்து - போர் குறித்து. மெய்ம்மலி உவகை - உடம்பு பூரிக்கும் உவகை. “மெய்ம்மலி உவகை செய்யும்" - புறம். 45. கேண்மை - வேந்தன் மேல்கொண்ட பற்று. துரத்தலின் - செலுத்துதலால். அழுந்துபடப் புல்லி அழுத்தமாகத் தழுவி. நீர்ப்பெயல் - மழை. மொக்குள் - நீர்க்குமிழ்.

-