உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526

இளங்குமரனார் தமிழ் வளம் 17

-

-

-

-

சுட்டிக்

பற்றி. சுட்டிய பெயரை

-

திரிந்து - சுழன்று. தகர் - செம்மறிக்கடா. முட்டி கைம்முட்டி. கால்தட்குநர் - கால்தடுக்கி விழுபவர். சுட்டிய கையில் காட்டிய கையொடும். தொட்டு குறிப்பிட்டவரை. இழைப்போர் போர் புரிவோர். சிலைப்பு முழக்கம். புடைத்தல் வன்மையாக. அடித்தல். வல்லியன் - உரப்பல் - அதட்டல். எயிறு - பல்; ஈண்டுத் தந்தம். திருத்துதல் (வளைந்த கருவிகளைச் சீர்செய்தல். “ஒருகை இரும்பிணத்தெயிறு மிறையாகத் திரிந்த வாள்வாள் திருத்தா” - புறம் 284. முனை முயங்குநர் - போரைத் தழுவிக்கொண்டவர். செஞ்சோற்று விலை செஞ்சோற்றுக்குத் தரும் விலை அஃது உயிர். தழீஇ - தழுவி. மகளிர் - தேவமகளிர். வதுவை - மணம்.

என்க.

66

'எவரும் சென்று புகும் உலகம் ஒன்றே ஆகலின் இரங்க வான்படர்ந்தனர்"

-

(1356) அரிநறுங்கள் - அரித்து எடுக்கப்பெற்ற நறிய கள்.நாள் மகிழ் செருக்கி - புதிய மகிழ்ச்சி மீக்கூர்ந்து. நெருநல் எல்லை - நேற்றைப் பகற்பொழுதில். திருமலி முற்றம் திருவிளங்கும் இல்லின் முற்றத்தில். கச்சை - கழுத்திலிடுங் கயிறு. கதழ்எரி பற்றியெரியும். தீ. நோன்தாள் - வலியமுயற்சி. புட்டில் ஆர்க்கும் - கணைப்புட்டில் பிணைக்கப்பெற்ற. மாவொடு -குதிரையொடு. முருக்கிதழ் மடந்தையர் - முருக்கம்பூவின் இதழ் போன்ற இதழுடைய மகளிர். முயங்கிய மார்பு - தழுவிய மார்பு. ஆர்கெழு - ஆரவாரம் பொருந்திய. பழனம் பொய்கை. விடலை - காளையர், வீரர், "நெருநல், பெருமகள் முன்னர் முற்றத்தோனே; இன்றே, மாவொடு நெருநல்,பெருமகள் செருக்கி மடந்தையர். முயங்கிய மார்பு, பழனத்ததுவே; தலை, வேந்தன் பாசறை யதுவே” என்க.

-

(1357) ஆட்புலம் கொன்று - பகை வீரர்கள் ஆகிய நிலத்தை உழுது. வாட்சால் போக்கி - வாள் ஆகிய சாலடித்து. எஃகம் வித்திய வேலாகிய வித்தினை விதைத்த. வைகல் உழவன் - நாளுழவன். படை பாய்தலின் - படைக்கண் பாய்ந்து தாக்குதலின். மலைப்புற மலைந்த - எதிரிட்ட வீரர் மலைப்படையுமாறு போரிட்ட. பலகை - கேடயம். கயமூசு கயல் மிக மொய்க்கும் கெண்டை மீன்.

-