உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528

இளங்குமரனார் தமிழ் வளம் 17

அல்லதை சாதலை அன்றி. அறியலரே - இல்லத்தில் சாவதை அறியலர். பிறர் மக்கட்கும் தம் மக்கட்கும் உள்ள வேற்றுமையை ஒரு மூதிற் பெண்டு கூறியதாம். "தம்மிற் சாவார்தம்மில்லோரே; என் சிறுவர், நூறி, வேந்தரொடு முளிபுற் கானத்து விளிவர்' என்பதாம். அரிய இப்பாடல் சிதைவு பட்டது தமிழன் தன் நிலை யறியா மடிமையாலே யாம்.

-

-

(1409) குரங்கு மேனி வளைந்த உடல். திரங்கு முகச் செதுமுலை உலர்ந்த கண்ணையுடைய வற்றிப் போன மார்பு. வினவுதியாயின் - ‘என் மகன் யாண்டுளன்' என வினவுதியாயின். (புறம். 86) சமம் போர். களிறு தலை அடுத்து

-

-

-

களிற்றில்

தலைவைத்து. மாகால் நீட்டி - குதிரையின் மேல் கால் வைத்து. முரச மெத்தணையாக முரசை மெல்லிய அணையாகக் கொண்டு. "நரைமூதாட்டி, மன்னர்க்குதவி, அருங்கடன் ஆற்றிக், கழுகுணக் கிடந்த காளை நும்மகன் கொல்லோ” என்க.

66

-

(1410) துடியன் - துடிப்பறை கொட்டுபவன். ஆர்த்தல் - ஆர வாரித்தல். எறிதல் வெட்டுதல். மேற் சென்றனன் - போர்மேற் சென்றனன். தன் - அவ்வீரனாகிய என் மகனை. ஒள்வாள் கழித்தான் -ஒளிபொருந்திய வாளை உறையில் இருந்து எடுத்தான். தழீ இந்தாம் - ஒலிக்குறிப்பு. “தழீஇம் தழீஇம்" நாலடி. 6. தண்ணுமை - சாப்பறை.

66

“துடிய, என்மகன் மேற்சென்றனனே; முறுவலன் தாக்கித் தண்ணுமை தழீஇந் தாமென்ன ஒள்வாள் கழித்தான்; வீழ்ந்தன களிறே” என்க.

உலகை

(1439)உலகு பொதி உருவம் தன்னுருவமாக யெல்லாம் தன்னுள் அடக்கிய உருவமே தன்னுருவமாக. பறந்தலை நன்காடு - பறந்தலையாகிய நன்காடு.அஃதாவது சுடுகாடு. புலவுங் கால் உலகை வெறுத்து வருந்தி அழுமோ புலவுக்களம் போர்க்களம்.

-

-

“நன்காடு என்போல் புலவுக்களத்தே வேலோனை இழந்து புலவுங் கொல்” என்க. இது காடு வாழ்த்து. காடு வாழ்த்தாவது, “பிறந்தவர் எல்லாம் அழிந்து ஒழியவும் தான் அழியாத புறங்காட்டை வாழ்த்துதல்” (தொல். பொருள். புறத். 24)