உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

(1455) நாய்ப்பிணவு

-

-

-

529

பெட்டை நாய். “பன்றி புல்வாய்

நாயென மூன்றும், ஒன்றிய என்ப பிணவின் பெயர்க்கொடை என்பது தொல்காப்பியம். (பொருள். மரபு. 59) கிழ நரி ஏற்றை - முதிய ஆண் நரி. 'நாய்ப்பிணவுக்கு ஒடுங்கிய கிழ நரி ஏற்றை' என்க. இறும்பில் தெறுவர - தூறுகளில் சுடுமாறு. பறந்தலைப் பாற்றிய சுடலை போர்க களத்தின் பாலதாகிய சுடலை. தெழித்து பேரொலி செய்து. ஆர்தர அறியா - ஆரவாரிக்க அறியாது. அஞ்சுவரு காடு - அஞ்சத்தக்க சுடுகாடு. “அஞ்சுவருகாடு பனிக்கடல் போல ஆர்தர அறியா” - அதன் அடங்கி ஒடுங்கிய நிலை குறித்தவாறு. (1475) மறலொடு கூற்றுவனொடு. மைந்து தருக்கி வலிமையில் செருக்குக்கொண்டு. திருமால்வழுதி - மன்னன் பெயர். ‘திருமால் வழுதி முன்மாறு ஏற்பவர் மன்னர் யார்?' என்க. முன்னி ரண்டடிகளும் ஆய்ந்து தெளிதற் குரியன, பிழைபாடுளவாகலின். (1492) இரிவது புறங்காட்டி ஓடுவது. கெண்டை மீனக்கொடி, மீன் இலச்சினையுமாம். தென்னவன் - பாண்டியனது. கடி கொள முனிந்த அழிக்குமாறு சினந்த. வாங்கு வளைவு. அவன் புறங்காட்டி ஓடான். அவனை எதிர்ப்பவனே புறங்காட்டி ஓடுவான். ஏனெனில் தென்னவன் வேம்பின் இலை அவன் சூடும் பூ ஆதலால் என்க. வேம்பின் இலையைக் கடிகொள முனிந்த கூற்றத்தின் புருவத்திற்கு ஒப்பிட்ட உவமை நயம் அறிந்தின்புறற்பாலது.

-

-

-