உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

2.

3.

4.

5.

6.

பின்னிணைப்பு - 1 குறிப்புரை

ஓம்புதல் - தவிர்தல். தோம் - குற்றம். கல்லல் - ஆராய்தல். தோண்டுதல். கைதவம் - வஞ்சம், சூது. தோம் நனி சொல்லல், தீநெறி செல்லல், கைதவம் கல்லல் என்க.

சொல்லல், புல்லல், கொல்லல், நில்லல் என்பன எதிர்மறைப் பொருளன. 'சொல்லாதிருக்க' என்பது போலக் கொள்க. எஞ்ஞான்றும் - எப்பொழுதும். புல்லுதல் - பொருந்துதல். செய்ந்நலம் -செய்ந்நன்றி.

மேவுவார் - அடைவார். தொன்மை மேவுவார்

-

பழைமை கருதி வாழ்வார். தொடர்வறாச் சுற்றம் மேவுவார் - என்றும் பிணைப்பு அகலாப் பெருஞ் சுற்றத்தொடு உறைவார். இன்மை வறுமை.

-

-

-

-

தாளுடைந்து - கால் வலுவிழந்து. யாக்கை - உடல். விளிந்து இறந்து. நாற்கதி - மக்கள், தேவர், விலங்கு, நரக கதிகள். மூழ்ந்தன வளைந்த என்பர் மயிலைநாதர். முனிவார் வெறுப்பார். முன்னி - நினைத்து. அளைமறிபாப்புப் பொருள் கோளுக்கு இஃது எடுத்துக்காட்டு.

காலும் - தகும். மூவுலகையும் தன்னையும் கொடுப்பினும் தகும். உண்டியே உயிரளித்தலால், “பிறர்க்குரிய ராவரோ” என்றார்.

கார் அரவு கரும்பாம்பு. கல்லார் வாய்ச் சொல்லைக் 'கரும்பாம்பு' என்றதால் அது நல்லார் செவியிற் புகுதலைக் ‘கடித்தல்’என்றார். மகிதலம் - உலகம். இப்பாம்புக் கடியைத் தீர்க்க மந்திரமும் இல்லை. தந்திரமும் இல்லை என்பதாம்.