உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.

8.

9.

10.

புறத்திரட்டு

531

வெறியுறு கமழ் கண்ணி - மணம் மிகப் பரவும் தலை மாலை. உறவு உற வருவன - தொடர்பு மிகுந்து வருவன. செறிவு உறு தொழிலினர் - தம்மொடு நெருங்கிச் செய்யும் தொழிலுடையவர். அறிவுறு தொழிலர் - அறிந்து பழகிய தன்மையர். பிறபிற - கேடு தரும் பலப்பல.

பட்டபொருள் சொல்லல் - நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு கூறுதல். “கடியவை விடுத்து இனியவை யுரைத்தால் எவரும் மகிழ்வர்" என்பதாம்.

-

உடையர் செல்வர், வாய்ப்புக்கள் உடையவருமாம். ‘சுற்றத்தவரும், இல்லாரை மதியார்' என்பது குறிப்பு.

உடுத்த - சூழ்ந்த. வழாஅது தவறாது. கொடைக்கடம் பூண்டு - கொடை புரிவதைக் கடமையாக மேற்கொண்டு. “சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை

என்னுங் குறளை நோக்குக.

11.

12.

13.

14.

15.

பெரும்பொருள் இருந்தும் பிறர்க்குப் பயன்படாமையால் ‘உவர்க்கடல்' என்றார். பயன்படும் செல்வத்தை 'ஊற் றென்றார். உளையே உள்ளாய். சிறுவிலைக்காலம் அருங்காலம் (பஞ்சநாள்) உறுபொருள் - மிகுபொருள். எய்தற்கரியது கிடைத்தற்கரியது. அந்நிலையே அப் பொழுதே. ‘என்று’ ‘வையகம்' என்னும் இரண்டு சொற் களையும் விலக்க இரண்டு குறட்பாக்கள் அமைந்திருத்தல் அறிக.

-

கொடிய ஒலி. ஏறு

-

வெய்ய குரல் இடி. இடியோடு கூடினும் முகிலை மதிப்பர்; குற்றம் உடையர் எனினும் கொடையாளரைப் புகழ்வர் என்க.

6

புல்லார்- பொருந்தார், புல்லிய தன்மை வாய்ந்தார். கட்டுரை - நல்லுரை, செறிவமைந்த உரை.

அற்று - அது; ஈண்டு, உண்மை. அற்று அன்று ஆதல் அவ்வுண்மையன்றாதல், அஃதாவது பொய்மை. உண்மை