உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.

26.

புறத்திரட்டு

533

இல்லறத்தார் பெறுமவற்றுள் அறிவறிந்த மக்கட் பேறே சீரியதாகலின், துறவறத்தார் பெறுமவற்றுள் மெய்யுணர்வே பேறு என்க. இரண்டன் பயனும் இன்பமாம்.

கொண்டது கொடுக்கவும், கொடுத்தது கொள்ளவும் உலகியன் முறை உளதாகலின் இரண்டும் அகன்ற பற்றற்ற நிலை கொள்க என்பதாம். நாடுதல் - விரும்புதல். அன்மை - விரும்பாமை இருவினையும் சேராமைக்கு வழி குறித்தார். தீர்த்தான் இழிதகைமை தீர்த்தான். முட்டறுத்தல் தடையை நீக்குதல், வழுவகற்றுதலுமாம். கட்டறுத்தல் பிறவிப் பிணியை அறுத்தல்.

27. அத்தை

28.

29.

30.

-

-

அதை. ஒன்றினும் ஒன்று பார்க்க அரிதாம். எழுதுதல், படித்தல், கற்றல் பயன்காணல், நிற்றல் என்பவை படிப்படியே அரிதாதல் அறிக.

நண்ணினர் - நண்பர், அன்பால் நெருங்கினவர். நண்ணார் - பகைவர். கோடாமை ம ஒருசார் சாயாமை. அஃதாவது மனங்கோணாமை. இருங்கழல் - வலிய கழல். கழல விடப் படும் காலணி கழலாயிற்று. கழலில் அணிவதாலும் அப்பெயராம். கோடாமை, எண்ணல், காத்தல் வேந்தர்க்கியல்பென்க.

சிறைப்படுவ புட்குலமே; சிறைவைக்கப் படுவார் இலர்; சிறகுகளை உடையவை பறவைகளே; அணை கட்டி நீர் தேக்குவதுண்டாகலின், ‘தீம்புனலும் அன்ன' என்றார். இவண் சிறை (தடை) அணை என்பதாம். 'கொடியன’ எவையும் இல்லை; குன்றத்து மாளிகைகளும், பூங்காக்களும் கொடி களை யுடையனவாம்.

வண்ணீர்மை

- வெள்ளிய தன்மை. உள்ளீடின்மையைக் காட்டுவதும் வெண்மையாம். "ஒளியார் முன்” என்னுங் குறளில் 'வெளியார்' என்றார் அறிவிலாரை. இங்கே, வெண்ணீர்மை யுடையார் இலர், முத்தே வெண்ணீர்மைய; கண்ணீர் வடிப்பார் இலர், கள் (தேன்) நீர் வடிப்பது பொழிலே; இரங்கி அழுவாரிலர்; யாழே மெல்லி தொலிக்கும். கோல் நிலவு நிலம் - ஆட்சி நிகழும் இடம்.