உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39.

40.

41.

42.

43.

44.

-

புறத்திரட்டு

-

535

-

வெருவரவீக்கும் பகைவர் அஞ்சுமாறு கட்டும். சரம் அம்பு. விறல் வெய்யோர் வலிமையும் கொடுமையும் வாய்ந்தோர். 'வெம்மை வேண்டல்' ஆதலால் போர் வேட்கையுடை யோருமாம். ஒருவர் ஒருவர் உணராமற் சென்றது என்பது ஒற்றின் சீர்மையாம்.

மள்ளர் - வீரர். இவர் வெட்சியார். இவர் செலவு கரந்தியல் காட்டுத் தீப் போல்வதென்க. மறைந்து பரவி வளைத்துக் காண்டு மூண்டெரியும் காட்டுத் தீ என இவர் செய்கை யோடு ஒட்டுக. அரந்தை - துன்பம். பதிதல் - தங்குதல் இஃது ஊர் அழிவிற்கு இரங்கி யுரைத்தது.

L

அரவூர்மதி பாம்பால் பற்றப்பட்ட முழுமதி. கரிதூர - கரிமூட. ஈமம் - சுடுகாடு, விறகு. இரவில் தீக் கொளுவி விட்டுப் பகலிலே கொலை செய்தற்கு எண்ணியிருந்தோர், கொல்லுதற்கு எவரையும் பெற்றிலர். அனைவரும் அழிந்து பட்டனர் ஆகலின் என்க.

வயவர் - வீரர். அவிய - அழிய. நாண் - வில் நாண். பூசல் - போர் ஆரவாரம். கொள்வான் - கொள்ளுமாறு; வானீற்று எச்சம். நிரைகொள்வான் தாக்கினார் ஆகலின் இவர் வெட்சியார். பகைவர் அனைவரும் ஒழிந்தார் ஆகலின் வில் நாண் ஒலியவிந்தது என்க.

-

-

குளிறு குரல் முரசம் - பேரொலி செய்யும் முரசம். கொட்டின் - முழக்கினால். வெரூஉம் - அஞ்சும். காண்டலும் ஆற்றா - காணவும் பொறா. ஆதலால் கானமெல்லாம் நிரை இடம் பெறுக என்பதாம்.

-

கடிமனைச் சீறூர் மங்கல மனைகளைக் கொண்ட சிறிய ஊர். கடி - காவலுமாம். வடிநவில்வேல் - கூரிதாய் வடிக்கப் பெற்ற புகழ் வாய்ந்த வேல். அடிபுனைதோல் மிதியடி. மறுத்தோம்பல் மீட்டல். "மறுத்தோம்பல் ஒட்டான் மள்ளன் ஆதலால் வருக" என்க.

-

99

-

இது படைத்தலைவர் படையாளரைக் கூவினது என்பார் நச்.