உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536

45.

46.

47.

48.

49.

50.

-

இளங்குமரனார் தமிழ் வளம் 17

மாற்றருந்துப்பு - பிறரால் விலக்குதற்கு அரிய வலிமை. வயம் - வெற்றி. வேந்தன் நல்லன் என்க. ஈதும் - ஈவோம். புல்வேய் குரம்பை - புல்லால் வேயப்பெற்ற குடிசை. புறஞ்சிறை வாய் புறத்தே ஒரு பகுதியில். “ஒற்றிவேய் உரைத்தார்க்கு ஈதும்

-

என்க.

-

நித்திலம் முத்து. பட்டம் - நெற்றிப்பட்டம், ஆவது ஓர் அணி. திலதம் - பொட்டு. ஓர்ந்து உடீஇ - தக்கதைத் தேர்ந்து உடுத்து. துடியர், வாழையடி வாழை மரபுவழி வருதலான் ‘தத்தம் துடியர்' என்றார். போர் மேற் செல்வார்க்கு ஊக்க மூட்டத்துடிகொட்டுதல் துடியர் தொழிலாம். “மறங்கடைக் கூட்டிய துடிநிலை" என்பார் தொல்காப்பியர். பொருள். 59. ஐயை தலைவி. இவண், கொற்றவை. கொற்றவைக்கு எருமைப் பலியூட்டல் பண்டை வழக்கு. அரசன் வேந்தன் என்பன, தாக்க எழுவானையும் தாக்கப்படுவானையுமாம். யாம் தன் மேல் சீறாமல் இன்று வஞ்சி சூடினான் என்க. வீரர் சீறுதல் வேந்தன் மேற் கொண்ட அன்பும், தம் வீறும் வெளிப் படுத்தும்.

-

'எடுத்த நிரை கொணா' என்றது வேந்தன் கட்டளை. வைவாள் - கூரியவாள். வாள் வாங்கினவன் வீரன். அவன் வாள் வாங்கியதும் பகைவேந்தர் மார்பு. விழி ஆயவை இடந்துடித்தன. இடைநிலைக் குணத் தீவகத்திற்கு இப்பாடல் எடுத்துக்காட்டு. - தண்டியலங்காரம். 39.

-

ஆபெயர்ப்போன் - பசுக்கூட்டத்தை மீட்போன்; இவன் கரந்தையான் என்க. பறவாப்புள் நிமித்தம்; அஃதாவது விரிச்சி. வெளிப்படை என்பது இது. "வந்தநீர் காண்மின் என்றது விரிச்சியுரை. நீர்சூழ் கிடக்கை - கடல்சூழ்ந்த உலகம்.

-

-

ஆயம் தொகுதி, கூட்டம். சுவடு தடம். படுமணி ஒலிக்கும் மணி. பகர்தல் - கூறுதல். ஒற்றன் கடமைச் சிறப்பால் வயவேந்தன் காதலுக்கு உரியவனானான். “நிரையும் நிரை யிருப்பும் உரைத்தோய், வேந்தன் காதலும்நிரையும் உரித் தாகுக உனக்கு” என்க.