உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538

56.

57.

58.

59.

60.

61.

62.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கொள்வினை மாற்றாக் கொடை- கொண்ட அளவிற் சிறிதும் குறையாத கொடை கைதூவாள் - கை ஒழியாள்.

வேந்தன் படை கொண்டு செல்லும்போது, படைத்துணைக்கு வேந்தர் பலர் வர அவன் விண்மீன் இடையே தோன்றும் வெண்மதி என்ன விளங்கினான் என்பதாம். பரிசு தன்மை

-

பேரில் வன்மை காட்ட வல்ல.

-

போர்க்கு அடல் ஆற்றும் புரவி குதிரை. தானாதி படைத்தலைவன். ஏனாதி என்பதொரு பட்டம். அதற்கு அடையாளமாக அரசன் மோதிரம் அளிப்பது வழக்கு. "தார்வேந்தன் மோதிரஞ்சேர் ஏனாதி, கார்க்கடற்குக் கரை” என்க.

போர் பெற்று நாளாயினமையின் அப்போர் பெறும் விருப்பினராய்த் தோள் சுமந்திருத்தலை வீரர் வெறுத்தனர். அவர் ஆண்மையால் பகைவர் நாட்டைக் கொள்ளையிட வல்லவர் ஆகலின் ஆள்வினைக் கொண்டி மாக்கள் எனப் பெற்றார். வெறுப்பால் உண்டி முனைந்தனர் என்க. ஊங்கு - இனிமேலும். செரு - போர்.

தான், விலங்கு; தனித்தது; பிறன் ஆணைக்குரியது; ஒருகையுடையது! அதனை இருகையுடைய மகனாகிய யான் அழித்தல் இழிவே. இஃதொரு வீரன் கூற்று.

சேணுயர் ஞாயில் மிக உயரத்துள்ள சூட்டு என்னும் மதிற்பொறி. ஏணி தவிர்தலால் பாய்ந்து ஏறினான். பாணியா - தாமதம் இன்றி. புள் - பறவை. குறும்பு - (பகைவர்) மதில். கடல் பரந்து மேருச் சூழ்காலம் - ஊழிக்காலம். சென்றது ஊழி போன்றது. கொடிமதில் காத்தோரைக் கொன்று விடுதலால் தொக்கடைந்தார். வீரர்க்குக் கடலும், மதிலுக்கு மேருவும், அகத்து வீரர்க்குக் கடலால் மறைந்த புவியும் உவமைகள். மறம் நாட்டும் - வீரத்தை நிலைநாட்டும். மைந்து - வீரம், வலிமை. அவர் மங்கலம் இழத்தல் ஒருதலை என எண்ணி நொந்தார் என்க. எறிதொறும் அழிக்கும் தொறும். நீங்காமைக்குப் பாசி உவமையாயிற்று.