உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540

இளங்குமரனார் தமிழ் வளம் 17

70.

-

புரிசை கோட்டை. கார் சூழ் குன்று

-

மேகத்தால் சூழப்

பெற்ற மலை. கடை வாயில். எயில்

-

மதில். விலங்கல் -

மலை. ஆகம் வென்பர் நச்.

-

71.

72.

73.

74.

75.

76.

77.

மார்பு. இஃது அகத்தோன் முற்றிய முதிர்

ஈற்றா - ஈன்றணிய பசு. பதிச்சுற்று - வெளி மதில். வேற்றரணம் உள்மதில். அகமதில் புறமதில் ஆகிய இரண்டனுள் புறம் திலை இழந்தமையால் “இரு கன்றின் ஒன்றிழந்த ஈற்றாப் போற் சீறி" என்றார். “இஃது அகத்துழிஞையோன் எயில் காத்த நொச்சி" நச்.

-

பொலம் - பொன், அழகு. பொறை - சுமை. திடர்படல் மேடு படல். விரகு அறிவு, சூழ்ச்சி, நீத்துநீர் - வெள்ளப்பெருக்கு. ஃது அகத்தோன் பாசி மறம். “அகத்தோர் மதிற்புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய நிலை” பாசிமறமாம். “பாசி என்றார், நீரிற் பாசிபோல இருவரும் ஒதுங்கியும் தூர்ந்தும் பொருதலின்" என்பர் நச். கடை - வாயில். மது - தேன். பதுக்கை மேடை, திட்டை. வாயில் தோறும் வீழ்ந்தோர் மேலே வேந்தன் வீழ்ந்து பட்டதால் வேறு மேடை வேண்டா

என்க.

-

கொல் + துறை கொற்றுறை, கொல்லன் உலைக்களம். அந்தரம் - வானம். அவுணர் போன்று எயில்மேல் வேலோர் தோன்றினார். அவுணர் - அசுரர்.

குடுமி இவண், முடி. விருந்தினர் வந்தார் புதியராய்ப் புகுந்த வீரர். முடி சூடுதற்குத் தடையாயவர்க்கு விண் விருந்து தந்தான் என்று பிறர் ஆர்த்தார்.

வந்த வேந்தனுக்கு வானும், இருந்த வேந்தனுக்கு ஊரும் தந்தாள் கொற்றவை. ஊரவன் வாளை இவண் பெற்றான், வானவன் வாளை வானிற் பெறுவளோ?

வலைவன் - வலைஞன். ஆங்கு - போல. தண்டத்தலைவர் - படைத்தலைவர். தண்டாவது படை. “விட்ட தண்டினில்' என்றார் கலிங்கத்துப் பரணியிலும். தலைக்கூடல் - சேர்தல். உண்டற்ற சோற்றார் - செஞ்சோற்றுக் கடன் கழித்த வீரர்.