உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

43

பெருக வழங்கும் வழக்குப்படி இப்பதிப்பில் நளவெண்பா எனக் குறிக்கப் பெற்றுள்ளது.

18. நாரத சரிதை

நாரதன் என்பானது வரலாறு கூறும் நூல் இஃதென்பது பெயரளவான் விளங்குகின்றது. இந்நாரதன் யாவன்? இவன் வரலாறென்ன என்பவை அறிதற் கியலா நிலையில் உள்ளன.

66

ஸ்ரீபுராணம் என்னும் நூலில் வரும் நாரதன், பர்வதன் என்னும் இருவருள் நாரதன் சரிதம் கூறுவதாக இந் நாரத சரிதம் இருக்கலாம்" என அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் கருதுகிறார்கள். (மறைந்து போன தமிழ் நூல்கள். பக். 170).

66

"நாரத சரிதம் அரசன் ஒருவனது சரித்திரம் கூறுவதற்கு அமைந்தது என்பது புறத்திரட்டு 496ஆம் பாடலால் புலப்படும். அவன் அரண்மனைச் சிறப்பு 861ஆம் பாடலால் விளங்கும். புறத்திரட்டிலுள்ள நாரத சரிதைச் செய்யுட்களை நோக்கும்போது கதைத் தலைவனாகிய அரசன் உலக இன்பங்களை வெறுத்துத்துறவு பூண்டான் என்று தெளியலாம். சமண வரலாறுகள் பலவும் கதைத் தலைவன் துறவு பூண்டு முத்தி எய்துதலோடு முடிகின்றன. அவ் வழியில் செல்லும் இந்நூலும் சமணம் சார்ந்தது ஆகலாம். யாப்பருங்கல விருத்தியில் இந் நூற்பாடலொன்று மேற்கோளாகக் காட்டப்பெற்று இருத்தலால் இதன் காலம் பதினொராம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்பது உறுதி” என்னுங் கருத்து களைப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் வழங்கி யுள்ளார்கள்.

புறத்திரட்டில், இடம் பெற்றுள்ள நாரத சரிதைப் பாடல்கள் (8) எட்டு. அவை வருமாறு.

304,356,414,425,426,496,861,1060.

19. நாலடியார்

நாலடியார்,நாலடி, நாலடிநானூறு என்னும் பெயர்களாலும் வழங்கப்பெறும். “அளவினாற் பெயர் பெற்றன பன்னிருபடலம், நாலடிநானூறு முதலாயின” என்னும் மயிலை நாதருரையால் (நன். 48) நாலடி என்பது அளவினாற் பெற்ற பெயர் என்பது தெளிவாம்.