உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

45

நானூறு பாடல்களில் 212 பாடல்களைப் புறத்திரட்டு ஆசிரியர் தம் தொகுப்பில் சேர்த்துள்ளார் என்பது இந்நூற் சிறப்பைப் புலப்படுத்துதல் ஒரு தலை. அதில் குறிக்கப்பெற்ற பாடலெண்கள் (212) இருநூற்றுப் பன்னிரண்டு அவை வருமாறு:

33, 34, 35, 36, 62, 63, 69, 70,71, 82, 83, 92, 114, 124, 125, 148, 149, 150, 151, 152, 162, 163, 164, 165, 166, 167, 177, 178, 209, 210, 211, 222, 223, 224, 225, 226, 237, 238, 239, 240, 244, 249, 261, 262, 272, 273, 290, 291, 310, 317, 318, 319, 340, 341, 342, 343, 358, 359, 360, 370, 371, 372, 373, 403, 404, 405, 418, 419, 435, 447, 461, 462, 463, 464, 465, 512, 519, 520, 523, 536, 537, 538, 539, 540, 557, 558, 559, 560, 561, 576, 577, 578, 579, 580, 581, 582, 606, 650, 651, 652, 653, 695, 704, 705, 706, 707, 708, 755, 798, 823, 824, 825, 826, 879, 913, 914, 915, 916, 917, 927, 928, 929, 930, 931, 932, 933, 941, 942, 943, 944, 945, 946, 955, 956, 959, 960, 961, 975, 976, 977, 978, 979, 988, 989, 990, 991, 992, 993, 1030, 1031, 1032, 1033, 1034, 1040, 1041, 1042, 1043, 1084, 1085, 1086, 1087, 1088, 1089, 1090, 1091, 1092, 1093, 1094, 1095, 1096, 1097, 1113, 1114, 1120, 1121, 1122, 1131, 1132, 1133, 1141, 1142, 1143, 1144, 1145, 1146, 1147, 1150, 1164, 1165, 1166, 1167, 1168, 1169, 1174, 1181, 1182, 1183, 1184, 1185, 1186, 1187, 1188, 1189, 1198, 1199, 1200, 1201, 1202, 1203, 1204, 1229, 1230.

20. நான்மணிக் கடிகை

கடிகை என்பது பல பொருள் ஒரு சொல். அரையாப்பு, தோள்வளை முதலிய அணிகலன்களையும், துண்டம் உண்கலம் நாழிகை முதலிய பொருள்களையும் குறிக்கும். நான்மணிக்கடிகை என்பது நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற அணிகலம் என்றாவது துண்டம் என்றாவது கொள்ளவேண்டும். “பவளக்கடிகை” என்னும் திணைமாலைச் சொற்குப் 'பவளத் துண்டம்' எனப் பொருள் கூறுவார் பழைய உரையாசிரியர். உ“காலெறி கடிகை” என்பது குறுந்தொகைச் சொல். அதற்குக் (கரும்பின்) “அடிப்பகுதியில் வெட்டப்பட்ட துண்டு” என்பது பொருளாம். அணிகலங்களில் மணி பதித்தல் உண்டென்பது,

1. பாடல் 42

2. பாடல் 267