உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

667

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும்

இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந் தருவிலை நன்கலம் அமைக்குங் காலை

என்னும் புறப்பாட்டால் புலப்படும். ஆக நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற அணிகலம் போல நான்கு நற்கருத்துக்களைக் கொண்ட பாடல்களால் அமைந்த நூல் நான்மணிக் கடிகையாயிற்று என்பதாம்.

நூற்று நான்கு வெண்பாக்களால் ஆகிய இந்நூலை இயற்றிய புலவர் பெருந்தகை விளம்பி நாகனார் என்பவர் ஆவர். இவர் விளம்பி என்னும் ஊரினர் என்பதும், நாகன் என்னும் இயற் பெயருடையவர் என்பதும் இவர் பெயரால் விளங்கும். இவர் வைணவ சமயத்தவர் என்பது,

66

மதிமன்னு மாயவன் வாண்முக மொக்கும் கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கர மொக்கும் முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்

எதிர்மலர் மற்றவன் கண்ணொக்கும் பூவைப் புதுமலர் ஒக்கும் நிறம்"

என்னும் கடவுள் வாழ்த்துச் செய்யுளால் நன்கறியப் பெறும். பாடற்கு நான்கு கருத்துக்கள் பொதிந்த இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் தன்கண் நான்கு கருத்துககளை அடக்கிக் கொண்டிருக்கும் அருமை நோக்கத்தக்கது.

“ஈன்றாளோ, டெண்ணக் கடவுளு மில்”

(55)

என்பதால் இவர்தம் தாயன்பும்,

“தன்னொடு செல்வது வேண்டின் அறஞ்செய்க”

(15)

என்பதால் அறப்பற்றும்,

“தனக்குப்பாழ் கற்றறிவில்லா வுடம்பு”

(20)

என்பதால் கல்விப்பற்றும்,

1. பாடல் 218.