உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

"வெல்வது, வேண்டின் வெகுளி விடல்”

(15)

47

என்பதால் சான்றாண்மைச் செறிவும் புலப்படும். இவர் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு என்பர்.

புறத்திரட்டில் வந்துள்ள செய்யுட்கள் (45) நாற்பத்தைந்து. அவை வருமாறு:

2, 50, 103, 106, 179, 188, 250, 260, 322, 331, 393, 504, 505, 506, 507, 524, 556, 573, 621, 709, 813, 814, 815, 816, 880. 898. 924, 934, 947, 1098, 1112, 1207, 1209, 1210, 1211, 1212, 1213, 1214, 1215, 1216, 1217, 1218, 1219, 1220, 1221.

21. பதிற்றுப்பத்து

நற்றிணை முதலாய எட்டுத்தொகை நூல்களுள் நான்காவது பதிற்றுப்பத்தாகும். பதிற்றுப்பத்தாவது நூறு. இப்பெயர் நூறு பாடல்களைத் தன்னகத்துக்கொண்ட நூலுக்கு ஆயிற்று.

சேரமன்னர் பதின்மரைப் புலவர்கள் பதின்மர் பத்துப் பத்துப் பாடல்களாகப் பாடிய நூல் இது. தாய்மொழி பேணாத் தமிழர் மடமையால் முதற்பத்தும் பத்தாம்பத்தும் ஒழிய எட்டுப் பத்துக்களே இன்று காணக்கிடைத்துள்ளன. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பெயர் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்றுள.

ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் உண்டு, அப் பதிகத்தில் பாட்டுடைத் தலைவன் பெயர், அவன் செய்த செயல்கள், பாடினோர் பெயர், பாடல்களின் பெயர், பாடிய புலவர் பெற்ற பரிசில் பாட்டுடைத் தலைவன் ஆட்சிக்காலம் ஆகியவை இடம் பெற்றுள. தமிழக வரலாற்றுக்குப் புற நானூற்றை அடுத்து உதவும் நூல் பதிற்றுப்பத்தே என்பது மிகையன்று.

இரண்டாம் பத்து முதல் ஒன்பதாம் பத்துமுடியக் குமட்டூர்க் கண்ணனார், பாலைக்கௌதமனார், காப்பியாற்றுக் காப்பியனார், பரணர், காக்கைபாடினியார் நச்செள்ளையார், கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன்,