உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ் வளம் 17

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், செல்வக்கடுங் கோவாழியாதன், தகடூரெறிந்த பெருஞ் சேரலிரும் பொறை, குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை ஆகியோர் இந்நூற்கண் பாடப்பெற்றோர் ஆவர்.

பதிற்றுப்பத்துக்குப் பழையவுரை ஒன்றுண்டு. அதனை இயற்றியவர் பெயரோ, காலமோ, வரலாறோ அறியக்கூடவில்லை. அவர், “சின்மையைச் சின்னூலென்றது போல ஈண்டுச் சிறுமை யாகக் கொள்க என்று 76ஆம் பாட்டின் உரையிற் கூறுவது கொண்டு சின்னூல் ஆசிரியரான குணவீர பண்டிதர் காலத்திற்குப் பிற்பட்டவர் இவ்வுரையாசிரியர் என்பதை அறியலாம். குறிப்புரை பழையவுரை இவற்றுடன் இந்நூலை முதற்கண் 1904ஆம் ஆண்டில் டாக்டர் ஐயர் வெளியிட்டார். கழக வழியாகச் சிறந்த விளக்கவுரை ஆராய்ச்சிக் குறிப்புக்கள் ஆகியவற்றுடன் 1950ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

இழந்துபோன இருபது பாடல்களில் இரண்டு பாடல்களைத் தந்த பெருமை புறத்திரட்டுக்கு உண்டு. புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள இந்நூற் பாடல்கள் (6). அவை வருமாறு:

845, 1260, 1267, 1275, 1283, 1506.

22. பரிபாடல்

பரிபாடல் என்பது ஒருவகைப்பா. அப்பாவால் அமைந்த நூல் பரிபாடல் ஆயிற்று. பரிபாடல் வெண்பா யாப்பின தென்றும், கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் உறுப்புக்களை யுடையதென்றும், காமமுங் கடவுளும் பொருளாக வருவதென்றும், சொற்சீர் அடி முடுகியல் அடி ஆகிய அடி வகைகளை யுடைய தென்றும், ஐம்பதடிச் சிறுமையாய் நானூறடிப் பெருமையாய் வருவதென்றும் தொல்காப்பியத்தாலும் அதன் உரைகளாலும் அறியலாம். (செய். 117, 119 -122,160)

பரிபாடல் 70 பாடல்களைக் கொண்டிருந்ததென்றும், அவற்றுள் திருமாலுக்கு எட்டும், செவ்வேட்கு முப்பத்தொன்றும், காடுகிழாட்கு ஒன்றும், வையைக்கு இருபத்தாறும், மதுரைக்கு நான்கும் உரியன என்றும்,