உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

புறத்திரட்டு

திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப செய்யபரி பாடற் றிறம்”

49

என்னும் வெண்பாவான் அறியலாம். ஆனால் திருமாலுக்குரியவை ஏழும், செவ்வேட்குரியவை எட்டும், வையைக் குரியவை ஒன்பதும் ஆக 24 பாடல்களும் சில உறுப்புக்களுமே கிடைத்துள. தந்நிலை யறியாத தமிழர்களால் தமிழ்த்தாய் உற்ற இழப்புக்கள் தாம் எத்துணை! எத்துணை!!

"ஓங்கு பரிபாடல்" எனச் சிறப்பிக்கப்பெறும் இஃது எட்டுத் தொகையுள் ஐந்தாவதாம். இசைப்பாவால் இயன்ற இந்நூலின் ஒவ்வொரு பாடலின் பின்னேயும் துறையும், இயற்றிய ஆசிரியர் பெயரும், இசை வகுத்தோர் பெயரும், பண்ணின் பெயரும் குறிக்கப்பெற்றுள. முதற் பதினொரு பாடல்கள் பாலையாழ் என்னும் பண்ணையும், அடுத்த ஐந்து பாடல்கள் நோதிறம் என்னும் பண்ணையும், அடுத்த நான்கு பாடல்கள் காந்தாரம் என்னும் பண்ணையும் சேர்ந்தவை என்பதை அறியும்போது பண்முறையில் ெ தொகுக்கப்பெற்றது இந்நூல் என்பது போதரும். அன்றியும் தேவாரப் பண்ணுக்கு முன்னோடியாக இப் பரிபாடல் திகழ்ந்த மையும் அறியக் கூடியதே.

L

தெய்வமாண்பும் இன்பச்சுவையும் திகழும் இந்நூலை இருக்கும் அளவிலேனும் எட்டச் செய்தவர் டாக்டர் ஐயரே ஆவர். 1918ஆம் ஆண்டில் பரிமேலழகர் உரை, குறிப்புரை ஆகியவற்றுடன் முதற்கண் வெளியிட்டார். பின்னர் அரிய விளக்கவுரை பெற்று அழகு தவழக் கழகவழியாக வெளிவந்துள்ளது.

பரிபாடல் ஏட்டுச்சுவடியிற் கிட்டாமல் புறத்திரட்டினால் பெற்றுள்ள உறுப்புக்கள் ஆறாகும். மதுரையைப் பற்றிய அப்பாடல் உறுப்புக்களின் அருமை சொல்லுக்கடங்காது என்பதைக் கற்பவர் உணராமலிரார். புறத்திரட்டில் அவை வரும் பாடல்கள் (6) ஆறு. அவ ைவருமாறு:

866, 874, 875, 876, 877, 878.