உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அறத்துப்பால்

1. கடவுள் வாழ்த்து

(“தான் வழிபடுங் கடவுளையாதல் எடுத்துக்கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல்”

-

- பரிமேலழகர்.

இதே பெயருடைய அதிகாரங்கள்: திருக்குறள் - 1. பன்னூல் பாடற்றிரட்டு - 1. பெருந்தொகை - 1.)

1.

ஆதிரை யானால் அமைந்த துலகே மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப் - பின்னரும் ஆதிரையா னாதிரையா 'னென்றே யறையுமால் ஊர்திரைநீர் 'வேலி யுலகு.

- முத்தொள்ளாயிரம் 1

தாமரைக் கண்ணன் தகையடி வாழ்க

2.

மதிமன்னு மாயவன் வாண்முக மொக்கும்

கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கர மொக்கும் முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளி

னெதிர்மலர் மற்றவன் கண்ணொக்கும் பூவைப் புதுமல ‘ரொக்கும் நிறம்.

- நான்மணிக்கடிகை 1

1. னென்றென். றயருமால்; னென்றென் றயர்வுறுமீ

2.வேலை.

3. ரேய்க்கும்,