உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வாள்பிடித் தாளி யேறித் தானவன் மாளக் கடும்போர் கடந்த குமரி

மூவா மெல்லடித் திருநிழல்

வாழி காக்கவிம் மலர்தலை யுலகே.

2. அவையடக்கம்

71

-ஆசிரியமாலை

(ஒருவர் தாம் செய்த நூலிலே குற்றம் ஏற்றாதபடி கற்றோரை வழிபட்டு அடக்குதல். “வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மின் என்று எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந்தன்று தொல்காப்பியம். (பொருள். செய். 112)

வியத்தக கண்டால் வியப்பவர் அறிஞர்

10. வியத்தக்க காணுங்கால் வெண்மையிற் றீர்ந்தார் வியத்தக்க தாக 'வியப்ப - வியத்தக்க

11.

12.

அல்ல வெனினும் அறியாதார் தாம்போல எல்லாம் வியப்ப ரினிது.

என்பது

- தகடூர் யாத்திரை

உவர்க்கடல் எண்ணி ஒதுக்கார் முத்தை

முந்நீர்ப் பிறந்த பவளத்தொடு சங்கு முத்தும் அந்நீ ருவர்க்கு மெனின்யாரவை நீக்கு கிற்பார் இந்நீர வென்சொற் பழுதாயினுங் கொள்ப வன்றே பொய்ந்நீர வல்லாப் பொருளால்விண் புகுது மென்பார் வழுக்களைக் களைவர் வளப்பே ரறிஞர்

கற்பா லுமிழ்ந்த மணியுங்கழு வாதுவிட்டால் நற்பா லழியுந் நகைவெண்மதி போனி றைந்த சொற்பா லுமிழ்ந்த மறுவும்மதி யாற்க ழூஉவிப் பொற்பா விழைத்துக் கொளற்பாலர் புலமை மிக்கார்.

சீவகசிந்தாமணி 5,4

-

3. வியப்பர்.

2. நீக்க.