உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ் வளம் 17

இ.பெ.அ; திருக். 4. நாலடியார். 4. நீதிக்களஞ்சியம். 36. இதன் சார்புடைய அதிகாரங்கள்; பழமொழி. 32 (அறஞ்செய்தல்) ப.பா.தி. 5 (அறச்சிறப்பு) பெருந். 2. (அறவியல்))

28.

29.

30.

31.

32.

இம்மையும் மறுமையும் இயைப்பது அறமே

ஈனுலகத் தாயி னிசைபெறூஉம் அஃதிறந் தேனுலகத் தாயி னினிததூஉந் தானொருவன் நாள்வாயு நல்லறஞ் செய்வாற் கிரண்டுலகும் வேள்வாய் கவட்டை நெறி.

சின்னா ளேனும் சீரறம் செய்க

பலநாளு மாற்றா ரெனினு மறத்தைச்

சிலநாள் சிறந்தவற்றாற் செய்க - 'கலைதாங்கி நைவது போலு நுசுப்பினாய் நல்லறஞ் செய்வது செய்யாது கேள்.

முன்னை நல்வினை பின்னைச் செல்வம்

முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார் பிற்பெரிய செல்வம் பெறுபவோ - வைப்போ டிகலிப் பொருள்செய்ய வெண்ணியக்கா லென்னாம் முதலிலார்க் கூதிய மில்.

தக்கவை ஆய்ந்து தகவே செய்க

தக்கமில் செய்கைப் பொருள்பெற்றா லப்பொருள் தொக்க வகையு முதலும் அதுவானால்

மிக்க வகையா லறஞ்செய் 3கெனவெகுடல்

அக்காரம் பால்செருக்கு மாறு.

ஒன்றிய வகையால் உயரறம் செய்க

இன்றி யமையா விருமுது 'மக்களும்

பொன்றினமை கண்டும் பொருள்பொருளாக் கொள்பவோ ஒன்றும் வகையா லறஞ்செய்க வூர்ந்துருளிற்

குன்று 'வழியடுப்ப தில்.

-பழமொழி 360, 367, 332,362, 369

1. முலை நெருங்கி. 2. பெறலாமோ. 3. யென வெருடல். 4. மக்களைப். 5. வழிதடுப்ப.