உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. திருக்குறள் ஞானபீடம்

திருவள்ளுவர் திருவுருவப்படம்: அதற்கு முன்னர்க் குத்து விளக்கு: அதனைச் சூழவும் செம்மலர்க் குவியல்: மலர்ப்பரப்பின் ஊடே நிறை (நெல்) மரக்கால்: மரக்கால் உச்சியில் தென்னம் பாளை விரியல்

வழிபாடும் வாழ்த்தும் இசையும் ஒரு பதினைந்து நிமையங்கள்! செவ்வண்ணச் சீருடைச் செல்வியர், குமரியர், தாயர் ஏறத்தாழ எழுபத்தைவர் ‘தாலப்பொலி' ஏந்தி எறும்பு வரிசையாய் இயலினர்

எல்லிய (எவர்சில்வர்) வட்டி (தாலம்). அதில் செம்பூப் பரப்பு: அதன் ஊடே ஒரு தேங்காய் முடி: அதில் எண்ணெய். திரிவிளக்கு. இது 'தாலப்பொலி' எழுச்சி

ஊர்வலத்தின் முன்னே வள்ளுவர் திருப்படம் தாலப் பொலி வரிசை: ஆடவர் பெண்டிர் தொடர்வரிசை: 'சண்டை' ‘சல்லரி' என்னும் கருவி முழக்கம் ஏறத்தாழ ஒருகல் தொலைவு ஊர்வலம் நெளிந்து செல்லும் ஆற்றின் ஊடே விளக்கேந்திச் செல்லும் படகு வரிசை யெனச் சாலையில் சென்ற தோற்றம் வயல் பரப்பிலும் தோப்புத் தடத்திலும் சென்ற எழில் தம்மை மறந்து மயக்கச் செய்யும் காட்சி

கனவுக் காட்சியா? கற்பனைக் காட்சியா?

இல்லை இல்லை கண்முன் 'கண்ட காட்சி

தமிழகத்து மண்ணிலே இப்படி ஒரு காட்சியா?

தமிழகத்து மண்ணிலே தொடங்குதற்குக், கேரளத்திலே தூண்டிவிட்ட காட்சி

சங்கரர் ‘காலடி’க்கு ஆறுகல் தொலையில் உள்ளது காஞ்ஞூர் தட்டாம்படி அதிலே நெடுஞ்சாலையைச் சார்ந்து -