உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வாழ்வியல் வளம்

163

'அறநெறி இதுவென அறிந்து கொண்ட என் மகள் போகிய காடு இனிதாய் அமைவதாக” என வேண்டுகிறாள் ஒரு தாய். "அவள் போகும் வழியிலே, அறிந்தவர்கள் இருந்து விருந்து செய்வார்களாக" என்று வேண்டுகிறாள் மற்றொரு தாய். “என் மகள் பிரிந்து போனதற்காக, நான் உண்மையில் அவளை வெறுக்கவில்லை என்பதைத் தெளிவாக்க, நானே அவள் வரும் வழியை எதிர்பார்த்திருந்து, விருந்து செய்யும் பேற்றைப் பெறமாட்டேனோ?" என ஏங்குகிறாள் இன்னாரு தாய். மற்றொரு தாய். “தெய்வங்களே என் செல்வ மகள் மேல் அவள் காதல் தலைவன் அளவிலா அன்பு செலுத்த நீங்கள் அருள்வீர்களாக" என்று வேண்டுகிறாள்.

“என் மகள் மீண்டு வருவதற்குக் காகமே! நீ கரைந்தருள வேண்டும்: அவ்வாறு செய்தால் பொற்கலத்தில் உனக்கு ஊனும் சோறும் படைப்பேன்” என்று கெஞ்சுகிறாள் பிறிதொரு தாய். அன்னை, அவள் பயன்படுத்திய கண்ணீர் வடிக்கிறாள்.

மகளைப் பிரிந்த ப்

பொருள்களைக் கண்டு கண்டு கண்ணீர்

அவளாகவே அவற்றைத் தழுவிக் கொண்டு அழுகின்றாள்.

66

இதுஎன் பாவைக்கு இனிய நன்பாவை:

இதுஎன் பைங்கிளி எடுத்த பைங்கிளி:

இது என் பூவைக்கு இனிய சொற்பூவை:

என்று அலமருகின்ற அன்னையை ஒவியமாகத் நீட்டிக் காட்டு கிறார் ஓதலாந்தையார்.

னி

மகளோடு விளையாடிய மகளிரைக் கண்டு கரைந்து உருகுகின்றாள் ஓரன்னை. அம்மகள் வளர்த்த வயலைக் கொடி நீரின்றி வாடியதைக் கண்டு “இனி உனக்கு நீர் விட்டு வளர்ப்பார் யாரோ? நீ இரக்கத்திற்கு உரியை” என்கிறாள். அவ்விரக்கத் திற்குரிய அன்னை.

பூந்தொட்டியில் தன் மகள் வளர்த்த குவளைக் கொடியின் வாடுமலரைப் பறித்து, அவள் ஆடிய பாவைக்குச் சூட்டி, அப்பாவையை "மகளே! மகளே!” என்று தழுவி மனம் பதைத்துப் பேதலிக்கிறாள் ஒரன்னை அவள் நிலை கண்டோர் வருந்துகின்றனர். ஒருவர் “அம்மா நின் கவலையை விடு; உன் கண்மணி வந்து விடுவாள்" என்று தேற்றுகிறார். ஆனால் அப் பெற்றமனம், “ஒரு மகளை உடையேன்; அவளும் பெருமலை