உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ்வளம்

18

வழியே நேற்றுச் சென்றாள்: நீ தாங்கிக்கொள் என்கிறீர். எப்படி என்னால் முடியும்? என் கண்ணின் மணியே நடைசுற்று நடந்தது போல் நடந்து போய்விட்டாளே”என்கிறாள்.

மகளின் பிரிவுக்கு வருந்தும் அன்னை நெஞ்சம் அவள் காதலனையும் நினைத்துக் கொள்கிறது “அவன் எம் மனைக்கு முதற்கண் அழைத்துக் கொண்டு செல்வானா?” என்று குறி சொல்பவனிடம் கேட்கிறது. “திருமணத்திற்கு முன்னே செய்யும் சிலம்பு கழித்தல் என்னும் சடங்கைத் தலைவன் தன் வீட்டில் செய்தாலும், நம் வீட்டுக்கு வந்து திருமணச் சடங்காவது செய்துகொள்ள ானா? இதனைத் பெற்றோர்க்கு எவரேனும் சொல்ல மாட்டார்களா?” என்று ?ஏங்குகிறது“என்னை மறந்தாலும் யான் மறவேன்” என்பதே அன்னை நெஞ்சம்! அங்கே வெறுப்பு இல்லை; வெடிப்பும் இல்லையாம்!

மாட்

தலைவன்

வீட்டைவிட்டு வெளியேறாத அன்னை வீதி கடந்து ஊர் கடந்து மகளைத் தேடவும் துணிகிறாள். செவிலியை விடுத்துத் தேடவும் ஏவுகிறாள். “மகள் நன்றாக இருக்கிறாள்” என்னும் நற்சொல்லைக் கேட்டு “எங்கிருந்தாலும் இனிது வாழ்க” என்று வாழ்த்திக் கொண்டிருக்கும் அன்னை நெஞ்சம். அந் நெஞ்சம் வாழ்வதாக!