உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. தோழியின் அருமை

தோழன் தோழி என்னும் சொற்கள் இந்நாளில் புதுமைப் பொலிவோடு விளங்குகின்றன. ஆனால் இவை அகப்பொருள் இலக்கண இலக்கியங்களில் மிகப் பழகிப் போன சொற்களாகும்

தோழன் என்னும் சொல் பழந்தமிழ் நூல்களில் நான்கே நான்கு இடங்களில் மட்டுமே வருகிறது. ஆனால் தோழி என்பதோ 550 இடங்களில் வருகிறது. இதுவே, இலக்கியத்தில் தோழிக்கு உரிய சிறந்த இடத்தை விளக்கும்.

66

அகத்திணை இலக்கியமே பெண்ணிலக்கியம் என்பர்: ஆங்குவரும் மாந்தர்களுள் பலர் பெண்பாலரே! பாங்கள் ஒரு துறை அளவில் வந்து போய்விடுகிறான்: பாணன் சில பொழுது வருகிறான்: தேர்ப்பாகன் கூற்றுக்குப் பெரிய இடமில்லை; தலைவனது தந்தை உட ன் பிறந்தார் பற்றி ஒன்றும் சொல்லலாகாது; தலைவியது தந்தையும் அண்ணன்மாரும் கூற்றுக்கு உரியவர் அல்லர்: கற்பியலில் வரும் மழலை மகன் இளந்தூதுவனே அன்றி உரையாடான்: தோழியும் செவிலியும் அன்னையும் பரத்தையும் அக இலக்கியத்தில் கொள்ளும் வாய்ப்பு மிகப் பெரியது” என்கிறது தமிழ்க் காதல். மேலும், “சங்க இலக்கியத்தில் 882 களவுப் பாடல்கள் உள. இவற்றுள் 842 பாடல்கள் தோழியின்றி கூட்டம் என்னும் ஒரு வகைக்கே வருவன. இதனால், அக இலக்கியத்திற்குத் தோழி என்னும் ஆள் இன்றியமையாதவள் என்பதும், தோழியிற் புணர்ச்சிக் குரிய துறைகளே புலவர்களின் நெஞ்சைக் கவர்ந்தன என்பதும் பெறலாம்” என விளங்குகின்றது.

தோழி சொல்லாடும் இடங்கள் களவுப் பகுதியில் முப்பத்து இரண்டும், கற்புப் பகுதியில் இருபத்து ஒன்றும் ஆக ஐம்பத்து மூன்று எனக் குறிப்பிடுகிறார் ஆசிரியர் தொல்காப்பியனார். அவள் உரையாடும் இடங்களையும் திறங்களையும் நோக்கப் பெண்ணியல்பு என்று சொல்லப் பெறும் பெருமைக் குணங்கள்