உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இளங்குமரனார் தமிழ்வளம்

18

வாழ்வின் பிழிவு ‘துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும்' ஆம். அத்து ன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் தம்மளவில் நின்று

பயனென்ன?

‘யாம் பெற்ற பேறு பெறுக வையகம்' என்னும் பெரு நெறி,‘எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும்' என்னும் அருள்நெறி. ‘எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணும் அருள் நெறி, உலக நெறியாக உயர்வோர் நெறியாகத் தூண்டுவது இவ்வாழ்வியல் வளம்!

துன்பத்தை வெல்லும் துணிவு' என்று தொடங்கும் வாழ்வியல் வளம்; 'வாழிய வையகம்’ என்னும் வாழ்த்துடன் நிறைகின்றது.

கட்டுரை எண்ணிக்கையில் இருபது; ஆனால் உட்பகுதிப் பிரிவதால் ஓர் ஐம்பதுக்கு மேற்பட்டது.

ஒவ்வொரு தலைப்பும்-செய்தியும் படிக்கவும் முடிக்கவும்

உரியது இல்லை. கடைப்பிடிக்க அமைந்தது.

கடைப்பிடி வாழ்வே, கடமையுணர் வாழ்வு!

வையத்துள் வாழ்வாங்கு வாழும் வாழ்வு!

இக்கட்டுரைகள் வானொலி வழி வெளிப்பட்டவை; இதழ் வழி வெளிப்படவை; மலர் வழி வெளிப்பட்டவை எனப் பல திறத்தன. மலரை மாலையாக்கிய தொகுப்பு இது. இதனை அருமையாய்த் தமிழுலகுக்கு வழங்குபவர் தமிழ்மண் அச்சகத்தார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்தும்.

அன்புடன்

இரா.இளங்குமரன்