உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ்வளம்

18

துன்பத்தைக்கண்டு எல்லாராலும் சிரிக்க முடியவில்லையே ஏன்? சிலர் உலகத்துத் துன்பமெல்லாம் தங்களுக்கே வந்ததாக நினைத்துக்கொள்கின்றனர். அத்துன்பத்தில் இருந்து விடுதலையே கிடை யாது என்ற முடிவுக்கும் வந்துவிடுகின்றனர். நம்மைப் பார்க்கிலும் துயரப்படுபவர்கள் எத்தனை எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் படும் துன்பத்தில் நம் துன்பம் எம்மட்டு? என்னும் தெளிவு வந்து விட்டால் அவர்கள் தம் துன்பத்தைக் கண்டு சிரிக்க வல்லவர்கள் ஆகிவிடுவார்கள். அவ்வளவுதான்! அப்பொழுது பார்க்க வேண்டுமே அவர்கள் ஆண்மைத் திறத்தை!

தைப் பொங்கல் விழாவின் போது சல்லிக்கட்டு நடத்து கிறார்கள். ‘மஞ்சு விரட்டு’ என்பதும் அதுவே. பழங்காலத்தில் அதனை ‘ஏறுதழுவுதல்’ என்றார்கள்.

பார்வையாலேயே

கயிறுருவி விடப்பட்ட காளை வெடிவாலெடுத்து எப்படித் தாவி வருகிறது! எதிரிட்டவர் குடரைச் சரிக்கவும் குத்திக் கிழிக்கவும் கொம்பை எப்படியெல்லாம் சிலுப்புக் கொண்டு வருகிறது அந்தக் காளையையும் அஞ்சாமல் அணைத்து நிறுத்திச் செயலற்றுப் போகச் செய்து விடுகின்றனரே! பார்த்த பலரையும் நடுக்கும் அக் காளையின் திமிலைப் பாய்ந்து முதுகில் தாவி விழுந்து அடக்கி விடுன்றனரே! இத்தகைய துணிவு கொண்டவர், துன்பம் என்னும் காளையை அடக்கி ஊர்ந்து செல்லவும் வல்லவர் அல்லரோ! அதனால் தான் இடுக்கண் வருங்கால் நகுக என்ற திருவள்ளுவர். ‘அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்" என்கிறார். துன்பத்தைக் கண்டு சிரிக்கும் சிரிப்புத்தான், அடங்காக் காளையையோ, அடங்காக்குதிரையையோ அடக்கி அதன் மேல் ஏறிச்செலுத்துவது போலத் துன்பத்தின் மேல் ஏறிச் செலுத்த வல்லது என விளக்கினார்.

ஒரு கப்பல் கடலில் செல்லுகிறது. அப்பொழுது மேகம் திரள்கிறது!வானம் இருள்கிறது; புயல் எழும்பி சூறை மோதுகிறது; கடலலைகளோ மலைபோல எழும்பி எழும்பி வீழ்கின்றன. கப்பல் நடுங்கும் நடுக்கத்தைச் சொல்வதா? கப்பலில் இருந்தவர் நடுங்கும் நடுக்கத்தைச் சொல்வதா? இந்நிலையில் துணிவு மிக்க ஒருவன் கலங்குபவர் முன்னே வந்து நின்றான். காற்றில் வைக்கப் பட்ட விளக்குப்போல நீங்கள் நடுங்குகிறீர்கள்; நடுக்கத்தை விட்டொழியுங்கள்; நகைத்து மகிழுங்கள்; அப்படி நகைப்பதே