உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

5

துன்பத்தைத் தொலைக்கும் கூரிய வாளாகும்; அழுது புலம்பினால் மட்டும் யாரும் பிழைத்து விடுவீர்களோ? வருவது வந்தே தீரும்; துணிந்து இருங்கள் என்றான். அஞ்சி அலறியவர்கள் ஆண்மை பெற்றனர்; நடுக்கம் விட்டனர். நலமே சூழ்ந்தது. இது சீவக சிந்தாமணியில் வரும் ஒரு காட்சி. “இடுக்கண் வருங்கால் நகுக என்னும் திருக்குறளுக்கு அமைந்த விளக்கமாகவே இச் செய்தி

அமைந்துள்ளதாம்.

99

'துன்பம் தனியே வராது' என்பது பழமொழி 'பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்' என்பதும் பழமொழியே. துன்பத்தின் மேல் துன்பம் தொடர்ந்து வரும் என்பதே இப்பழமொழிகளின் கருத்தாகும்

66

ஒரு நாள் அடைமழை பெய்தது.அப்பொழுது பசு கன்று ஈன்றது! வீட்டுக் கூரை சரிந்தது: சுவர் சாய்ந்தது; மனைவி நோயுற்றுக் கிடந்தாள்; வேலைக்காரன் இறந்து போனான்; நிலத்தில் ஈரம் உலருமுன் விதைக்க வேண்டுமென்று விதைப் பெட்டியுடன் புறப்பட்டான்; “கடனைத் தந்து விட்டுப்போ" என்று வரிந்து கட்டிக் கொண்டு அலுவலர் தடுத்தார்; பாவலன் ஒருவன் வந்து, பாடிப் பரிசு கேட்டான்; இப்படி அடுக்கடுக்காகத் துயர் வந்தால் அந்தப் பாவிமகன் படும் பாட்டைப் பார்க்க முடியுமா?" என்று விவேக சிந்தாமணி என்னும் நூலில் ஒரு பாட்டு வருகின்றது.

இ இட்டுக்கட்டிய செய்திகளே இவை என்றாலும் துன்பம் தொடுத்துவரும் என்பதை விளக்குவதற்காக வந்ததேயாம். துன்பத்தைக் கண்டு இவ்வாறு துடித்துப் பாடுபவர், பலர் ருந்தாலும், திருவள்ளுவர் மிகத் தெளிவுடன் பாடியுள்ளார். துன்பநீக்கத்தைப் பற்றிக்கருத்தாகக் கூறியுள்ளார். அழுபவர்களைக் கட்டிப்பிடித்து அழுதால் ஆகிவிடுமா? கலங்குபவர்களைக் கண்டு கலங்கிப் போனவர்களைத் தூக்கி நிறுத்தித் தூண்போல ஆக்குபவர் அல்லரோ வேண்டும்? அவ்வகையில் திருவள்ளுவர் துணிவு காட்டித் தூக்கி நிறுத்துகிறார்.

மழைத்துளி எவ்வளவு சிறிது. ஆனால் பலகோடி மழைத் துளிகள் கூடினால் வெள்ளமாகப் பெருக்கெடுக்கின்றதே.அதிலும் காட்டாற்று வெள்ளத்தைக் காணவேண்டும் வேண்டுமே! கரையுண்டா? கட்டுண்டா? காட்டாற்று வெள்ளம் போல் கவலை பெருகினால்தான் என்ன?