உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CO

6

இளங்குமரனார் தமிழ்வளம்

18

வெள்ளத்தையே எதிரிட்டுக் கடக்கும் எழுச்சியாளர்கள் இலரா? வெள்ளத்தில் மூழ்குவாரை எடுத்துக் கரையேற்ற வல்ல ஏந்தல்கள் இலரா? அவர்களை வெள்ளம் என்ன

சய்து

விட்டது? வெள்ளத்தின் வீரார்ப்பையே அடக்கி வெற்றிக் கொடி நாட்டி விடுகிறார்களே!

பார்க்கிறார் வள்ளுவர்.

66

இத்தகையவர்களை எண்ணிப்

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்

என்கிறார்.

நினைத்த அளவிலே துன்பம் இல்லாமல் ஒழியுமாம். யார் நினைத்த அளவில்? அறிவுடையவன் நினைத்த அளவில்!

அறிவுக்கு ‘உரன்' என்பது ஒரு தமிழ்ப்பெயர். ‘தைர்யம்’ என்பது வடமொழிப் பெயர். உரன் என்பதற்கும் அறிவு, ஊக்கம் என இரு பொருளுண்டு தைர்யம் என்பதற்கும் அறிவு, ஊக்கம் எனும் இரு பொருளும் உண்டு. அறிவும் ஊக்கமும் தனித்தனி பிரிக்க முடியாதவை என்பதைக் காட்டுவன அல்லவோ இச்சொற்கள். 'துணிந்தவனுக்குத் துக்கமில்லை' என்பதை எளிமையாக விளக்குகின்றதே.

அறிவு துன்பத்தை அழிக்குமா? கட்டாயம் அழிக்கும். அப்படி அழிக்க வல்லதே அறிவாம். துன்பத்தை முளையிலேயே கிள்ளி எறிய வல்ல கருவி அறிவேயாம்.

துன்பம் என்பது என்ன? எண்ணத்தைப் பொறுத்துத் தானே துன்பமும் துன்பமில்லாமையும் உள்ளன. எவ்வளவு பெரிய பெரிய துயர்களையும் சிலர் எவ்வளவு எளிமையாகச் சட்டையில் பட்ட தூசியைத் தட்டுவது போலத் தட்டி விட்டுப் போய் விடுகிறார்கள்! எப்படி அவர்களால் முடிகின்றது?

ஒரு வீடு தீப்பற்றி எரிகிறது. அது அயலார் வீடு அன்று; தம் வீடு! தம் வீடு எரியும் போது எப்படித் தவிப்பு வரும்? ஆனால் ஒருவர் தம் வீடு பற்றி எரியும் போது வேடிக்கை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன அழகாக எரிகிறது. தீயின் நாக்கு எப்படி நீள்கிறது. தீ. பூப்பூவாய் எப்படிச் சொரிகிறது: என்னென்ன அழகாக வாண வேடிக்கை விடுகிறது தீப்பிழம்பு என்றுபார்த்துக்கொண்டிருந்தாராம்.அவர். 'நோகுச்சி' என்னும் சப்பானியப் புலவர். வரலாற்றுக் குறிப்பு, இது.