உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

7

பழைய திருவிளையாடல் புராணம் பாடிய புலவர் வேம்பத்தூர் என்னும் ஊரினர். அவ்வூரில் ‘பிச்சுவையர்’ என்பார் ஒருவர் இருந்தார். அவர் வீடு ஒரு நாள் தீப்பற்றிக் கெண்டது. கட்டுக் கட்டாக இருந்த ஏடுகள் எல்லாம் எரிந்தன. புலவர்க்கு எரிச்சல்; ஏக்கம் தானே வரவேண்டும்! ஆனால் ஒரு பாட்டு வந்தது.

66

வீட்டையும் தான் மேய்ந்தான் விளங்கமுன்னோர் தேடிவைத்த ஏட்டையும்தான் மேய்ந்தான் இதுவென்னே - கேட்டிலையே தெண்டிரைசூழ் இந்தச் செகதலத்த வன்நிதமும்

அண்டினரைக் கொல்லியாத லான்

தீயாகிய மாடு வீட்டை மேய்ந்ததாம்: ஏட்டையும் மேய்ந்ததாம்! ஏன் அப்படி மேய்ந்தது? அண்டியவரை எல்லாம் அழிப்பதே அந்த மாட்டின் வேலையாயிற்றே; அதனால்

எரி நெருப்பையும் இனிய தென்றலாக்குவது எது? உள்ளம் தான்! உள்ளத்து உண்டாகிய உரம்தான். வெளி வீராப்பு இதனைச் செய்யுமா?

சுவரின் மேல் ஓங்கி அடிக்கப் பட்ட பந்து, எவ்வளவு விரைவில் சென்றதோ அவ்வளவு விரைவில் திரும்புகின்றது. ஏன்? தாக்கிய விரைவில் தடுத்துத் திருப்பி விடுகிறது சுவரின் வன்மை அப்படியே வலிய உள்ளம் உடையவர்களைத் தாக்கச் சென்ற துன்பமும் அவர்கள் வலிமைக்கு முன் நிற்கமாட்டாமல் தலை தெறிக்க ஓடிவிடும்

கற்பாறைமேல் மோதினால் தலை தப்புமா? கற்பாறைதான் தலை மோதுதலால் பொடியாகிப் போகுமா? கற்பாறைபோல் மை வாய்ந்தவர்களைக் கவலை, கவலைப் படுத்துவதே இல்லை. கவலைக்கு இடந்தந்தால் தானே அது பதம் பார்க்கும்? கவலையைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லையே!

மோத வந்த கவலையை எப்படி முகத்தைச் சுழிக்காமல் திருப்பி விட்டுவிடுகிறார்கள்? புத்தர் பெருமான் ஒரு வீட்டின் முன்நின்றார்.அவரைக்கடுமொழியால் திட்டினான் வீட்டுக்காரன். கடுப்பே அடையாமல் கனிவோடு புத்தர்வீட்டுக்காரனை நோக்கு கிறார். “அன்பனே, நீ இரவலன் ஒருவனுக்குப் பிச்சை கொண்டு வருகிறாய். அந்த இரவலன் உன் பிச்சை வேண்டா என்றால் அப்பிச்சை யாரைச் சேரும்? என்றார். "பிச்சை கொண்டு